வெள்ளி, 18 மார்ச், 2011

பூமிக்கு மிக அருகில் இன்று சந்திரன் வருவதால் (சூப்பர் மூன்) சுனாமி, பூகம்பம் மற்றும் பல்வேறு அனர்த்தங்கள் நிகழ்கின்றது என பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று பூமியில் இருந்து மிகக் குறைந்தளவான தூரமான 3 இலட்சத்து 56 ஆயிரத்து 577 கிலோமீற்றர் தொலைவில் சந்திரன் காட்சியளிக்கும்.

பூமியை சந்திரன் நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது. இந்த நீள்வட்டப்பாதை இரு இடங்களில் பூமிக்கு நெருக்கமாக வரும். இதனால் வழமையாக தோற்றமளிக்கும் சந்திரனின் தோற்றத்தைவிட 14 சதவீதம் பெரிதாக இருக்கும்.

கடந்த 1912ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி பூமியிலிருந்து 3 இலட்சத்து 56 ஆயிரத்து 375 கிலோமீற்றர் தொலைவில் சந்திரன் காட்சியளித்தமை குறிப்பிடத்தக்கது.இதேபோன்று 2125 ஆம் ஆண்டு பெப்ரவரி 3ஆம் திகதி பூமியிலிருந்து 4 இலட்சத்து 6ஆயிரத்து 720 கிலோமீற்றர் தொலைவில் சென்றுவிடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் ஜப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டமைக்கு சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவதனால் என மக்கள் மத்தியில் வதந்திகள் பரப்பப்பட்டன.

இது வழக்கமான ஒன்று என்றும் இதுகுறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக