புதன், 2 மார்ச், 2011


பணிப்புலம் - வயல்கரையில் (சாத்தவோலை) எழுந்தருளி இருக்கும் சம்புநாதீஸ்வரி சமேத சம்புநாதீஸ்வரர் ஆலய
மஹோற்சவிழா 22.02.2011 செவ்வாய்க்கிழமை கொடியேற்ற திருவிழாவுடன் ஆரம்பமாகி

02.03.2011 வியாழக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் (சம்பில்துறை தீர்த்தக் கரையில்) நிகழ திருவருள் கூடியுள்ளது

இலங்கையில் பிரசித்திபெற்று விளங்கும் பழம் பெரும் சிவாலயங்களில் சுயம்பு சேஷ்திரமாகிய
சம்புநாத சேஷ்திரம் என அழைக்கப்படும் இவ் சம்புநாதீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும்.

இவ் ஆலயம் தட்சண கைலாசமாகிய திருகோணமலைக்கு (கோணேஸ்வரத்திற்கு)
வடக்கு திசையிலும் இராமசேதுவுக்கு (இராமேஸ்வரத்திற்கு) கிழக்கு திசையிலும்
(குறிப்பாக வலிகாமம்-மேற்கில்) அமைந்திருந்ததாக தட்சண கைலாய புராணம் - சுயம்புநாத
படலத்தில் குறிக்கப்பெற்றுள்ளது.

02.03.2011 ம் திகதி நடைபெற்றதேர்த் திருவிழாவின் போது எடுக்கப் பெற்ற
நிழல் படங்கள் கீழே பதிவாகின்றன
படங்கள் அனுப்பியவர் ;சோபி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக