திங்கள், 7 மார்ச், 2011

உண்மை சம்பவம் .எழுதுபவர் நியூஸ்நேசன்.கொம் வாசகர் ;பக்கம் 2

அவளை நன்றாகப் பார்த்துக் கொள்வதாகக் கூறி அவளை அழைத்துச் சென்ற கணவனின்
நடத்தையில், நாட்கள் செல்லச் செல்ல மீண்டும் வற்புறுத்தல்கள் ஆரம்பமாகின
.இந்நிலையில் அவள் கர்ப்பமானாள். ஆனால் கணவனின் துன்புறுத்தல்கள் தொடர்ந்தன.
இனிமேல் கணவனுடன் வாழ முடியாது, தாய் வீடு சென்று விடுவதே தனக்கும், தன் வயிற்றில்
வளரும் குழந்தைக்கும் நல்லது என எண்ணினாள்.
தாய் வீடு செல்ல முடிவெடுத்தாள். தன் தாய்க்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தாள்.
தன் தாயுடன் மனம் விட்டு பேசி தன் நிலையை எடுத்துக் கூறினாள். தாயாருக்கு உடல்
நலம் இல்லை என்று தந்தி கொடுக்கச் சொன்னாள். தந்தியும் வந்தது. அதை உண்மை என்று
நம்பிய அவன் மனைவியை ஊருக்கு அனுப்பி வைத்தான்.

ஊருக்கு வந்ததும் "இனிமேல் என்னால் அவனுடன் வாழ முடியாது, எனக்கு அவனிடமிருந்து
விவாகரத்து வாங்கிக் கொடுங்கள்" என்று புலம்பினாள். பெற்றோர் எவ்வித முடிவும்
எடுக்க முடியாமல் வேதனையில் வெந்து போனார்கள். அடுத்தடுத்து திருமணம் ஆக வேண்டிய
இளைய மகள்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனையில் மூழ்கிப் போனார்கள். இந்நிலையில்
அவளுக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது.அவனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவனிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. குழந்தையைப் பார்க்க அவன் வரவும் இல்லை.
பின்னர் இருவருக்கும் வேறு வழியின்றி விவாகரத்து ஆனது.

மாதங்கள் பல உருண்டோடின. பெற்றோரின் கையில் குழந்தையை ஒப்படைத்து விட்டு ,ஒரு
பாடசாலையில் ஆசிரியர் பணியில் சேர்ந்தாள்.தன்னால் தன் தங்கைகளின் திருமணம்
தடைப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பாடசாலை அமைந்துள்ள அதே ஊரில் ஒரு பெண்கள்
விடுதியில் தங்கி இருந்தாள். அதன் பின் தன் பணியினை கண்ணும் கருத்துமாக ஆற்றி
வந்தாள். அந்த விடுதியில் தான் அவளது வாழ்க்கை திசைமாறத் தொடங்கியது.

அதன் பின் நடந்தது என்ன ??????????? காத்திருங்கள் .தொடரும் .....................


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக