புதன், 2 மார்ச், 2011

உண்மைச்சம்பவம் புதிய தொடர்;எழுதுபவர் நியூஸ் நேசன் .கொம் வாசகர்

உண்மைக்கதை

திசைமாறிய பறவை


அன்பும் அழகுமாக வலம் வந்த அழகி, அவள். சரியான கணவன் அமையாததால் அவளது வாழ்கையே

திசைமாறிப் போனது.


படித்தவர்கள் நிறைந்த அந்தக் கிராமத்தில் ,பாரம்பரியம் மிக்க
குடும்பத்தில் பிறந்தவள் அவள் .அழகுடனும் பண்புடனும் திகழ்ந்த அவளுக்கு, அதே ஊரை
சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்யப் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பெற்றது.
மாப்பிள்ளை வெளிநாடு ஒன்றில் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பவர். திருமணம்
முடிந்த கையோடு மனைவியையும் அழைத்துச் சென்று விட்டார் .அங்கு சென்ற பின்னர் தான்

கணவனுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பது அவளுக்குத் தெரிய வந்தது. ஆரம்பத்தில்

மது அருந்தி வந்தாலும் கணவன் தன் மீது பாசமும் பரிவுவுடனும் இருந்து வந்ததால்
அவளும் அமைதியாக தன் காலத்தையும் நேரத்தையும் கழித்து வந்தாள். ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள் என்று சொல்லுவார்களே ,திருமணமாகி மூன்று மாதங்கள் ஓரளவு
அமைதியாகவே கழிந்தது.

நாட்கள் செல்லச் செல்ல அவனது சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத்
தொடங்கியது. தினமும் குடித்து விட்டு வந்து மனைவியை அடித்துத் துன்புறுத்தத்
தொடங்கினான் . "என்னடி இது சாப்பாடு ?" என்று காலால் தட்டை உதைப்பதும்
திட்டுவதுமாக அவனது அட்டுழியம் தொடர்ந்தது. அவளும் எவ்வளவைத் தான்
தாங்குவாள்.உருகிய மெழுகைப் போல துடித்தாள். இது பற்றி தன் பெற்றோருக்கு
அறியப்படுத்த அவள் விரும்பவில்லை .தன் திருமணத்தை நடத்தவே தன் தந்தை விழிபிதுங்கி
நின்றதை பார்த்தவள் ,தனக்குப் பின்னே இன்னும் இரண்டு தங்கைகளையும் அவர்களின்
எதிர்காலத்தையும் எண்ணி தன் கணவன் என்றோ ஒருநாள் மாறுவான் என்ற நம்பிக்கையுடன்
காத்திருந்தாள்.

ஒருநாள் தீடிரென்று தனது நண்பர்கள் சகிதம் மதுபோத்தல்களுடன்
வீட்டிற்கு வந்தவன் ,போதையிலே தள்ளாடினான் .மற்றவர்களின் முன் தன் மனைவியை கண்டபடி

பேசி அவளின் ஆடையைப் பிடித்து இழுத்து அலங்கோலப்படுத்தினான். நிலைமையின்

விபரீதத்தைப் புரிந்து கொண்ட அவள் ,அங்கிருந்து தப்பி ஓடினாள். சுமார் நூறு அடி
தூரத்தில் வாழும் ஒரு தமிழர்களின் வீட்டில் தஞ்சம் புகுந்தாள். அவர்களிடம் தன்
கதையைக் கூறி கண்ணீர் வடித்தாள். அடுத்த நாள் அந்த வீட்டார் அவளது கணவனுடன் சமரசம்

பேசி அவளை அவனுடன் அனுப்பி வைத்தனர் .


அதன் பின் நடந்தது என்ன ??????????? காத்திருங்கள் .தொடரும் .....................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக