திங்கள், 28 மார்ச், 2011

எழுதுபவர் கலட்டி.கொம் வாசகர் வாசகர்களின் கருத்து தேவை .எழுதுபவரை ஊக்கபடுத்த.....

உண்மைக் கதை

இரு மனம் சேராத திரு---மணம்

கணவனும் மனைவியும் இரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் தான். ஆனால் அதற்காக
அவசரப்பட்டு முழு இரகசியங்களையுமே

வெட்ட வெளிச்சம் போட்டு காட்டினால் அது சிலவேளைகளில் விபரீதத்திலே கூட

முடிந்துவிடலாம். தாம்பதியதிலே துரோகம் கூடாது. அதை காரணமாகக் கொண்டு பழைய
நிகழ்வுகளையெல்லாம் பட்டியல் போட்டு பறைசாற்றினால் , அதுவே தீராத விரோதம் ஆகி
விடலாம்.

ஆகவே தாம்பத்தியத்தின் ஒவ்வொரு படிக்கட்டிலுமே மிகவும் கவனமாகக் காலடி எடுத்து

வைக்க வேண்டும். இல்லாவிட்டால் , நன்றாக அமைய வேண்டிய குடும்பவாழ்வை கோட்டை
விட்டுவிட நேரிடும் என்பதற்கு இந்தக்கதை ஒரு நல்ல உதாரணம் .

கல்லூரிக் காலத்தில் பருவக் கோளாறினால் ஏற்படும் காதலில் இருந்து என் தோழியும்

தப்பிக்க முடியவில்லை அவளும் ஒருவனை நேசித்தாள்.
முதலில் மறுத்தாலும் அவனது செயல்கள் சிலவற்றில் மனதை பறிகொடுத்து இவளும் அவனது
காதல் வலையில் மாட்டிக் கொண்டாள் .ஆண்டுகள் மூன்று உருண்டோடியதே தெரியவில்லை .
தீடிரென ஒருநாள் வீட்டில் உள்ளவர்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டது. பிறகு என்ன
வழக்கம் போல ஏச்சுக்கள் ,நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் .இப்போது போல அப்போது
தொலைபேசியிலோ ,செல்போனிலோ தொடர்பு கொள்ள முடியவில்லை. அவனின் தரிசனதிட்காக
காத்திருந்த என் நண்பி மிகவும் ஏங்கினாள். அவளது தாயோரோ நீ அவனை மறுபடி
சந்தித்தாலோ நான்

தற்கொலை செய்து விடுவேன் என மிரட்டினாள்.இதனால் மனமொடிந்து போன என் தோழி தாய்

சொல்லிற்கு மதிப்பளித்து அவனை அடியோடு மறந்து விட முயன்றாள். முடியுமா?

அதன் பின்னர் பெரியவர்களின் வற்புறுத்தலால் என் தோழி அறிமுகமே இல்லாத ஒருவனுக்கு

மாலையிட்டாள் . அதன் பின் நடந்தது என்ன ?? காத்திருங்கள். தொடரும் ------------
கதை பற்றிய உங்களின் எண்ணங்களை எதிர்பார்கிறேன் .கலட்டி.கொம் வாசகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக