செவ்வாய், 15 மார்ச், 2011

நமது ஊர் உண்மை சம்பவம் எழுதுபவர் நியூஸ்நேசன்.கொம் வாசகர்

திசை மாறிய பறவை பாகம் 3

தனிமை வாழ்வின் கொடுரமும் ,கடந்த கால வாழ்க்கை தந்த வேதனையும் மறக்க முடியாமல்
அவள் மனதளவில் மிகவும் துயருற்றாள். இதற்கு மாற்றாக தனிமையின் கொடுமையில் இருந்து
விடுபட அவள் தானே ஒரு வழியைத் தேடிக் கொண்டாள். அவளது கணவன் எந்த மது
பழக்கத்திற்கு அடிமையாகி அவளது வாழ்க்கைக்கு எமனாக இருந்தானோ, அதே மதுப்
பழக்கத்திற்கு அவளும் ஆளாகினாள்.யாரைப் பற்றியும் எவரைப்பற்றியும் கவலைப்படாமல்
உல்லாச வானில் சிறகடித்துப் பறந்தாள். அது மட்டுமா அவளின் இப்படிப்பட்ட நடத்தைகளை
கேள்விப்பட்ட அவளது உறவுக்கார வாலிபர்களும் அவளை தங்கள் தேவைக்கு பகிர்ந்து கொள்ள
எண்ணினர்.


ஆண்டுகள் பல உருண்டோடின.அவளின் மகளுக்கு பெற்றோர்களே பார்த்து ஒரு மாப்பிள்ளைக்கு
கட்டி வைத்தனர். மணப்பெண்ணின் தாயாரின் கேவலமான நடத்தை பற்றி கேள்விப்பட்ட
மணமகன் வீட்டினர் ,அவளை வீட்டை விட்டே துரத்திவிட்டனர். ஆனால் அவள் எங்கு
இருக்கிறாள் என்பது பற்றி யாராலுமே அறிய முடியவில்லை .நன்றாக வாழ வேண்டிய ஒரு
குடும்பத்தின் வாழ்க்கை ,மதுவிற்கு அடிமையாகி எப்படி சீரழிந்து திசை மாறிப்
போயிற்று.இது யார் குற்றம் ? திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பதை
மனதில் கொண்டு ,தங்கள் பிள்ளைகளுக்கு தகுதியான துணையை பெற்றோர் முடிவு செய்ய
வேண்டும் .அப்படி செய்தால் தான் இது போன்ற திசை மாறிய பறைவைகள் உருவாகாமல் தடுக்க
முடியும்.

இத்துடன் திசைமாறிய பறவை உண்மைக் கதை முற்றுப் பெறுகின்றது. தொடர்ந்து அடுத்த
வாரம் முதல் இன்னும் ஒரு மாறுபட்ட உண்மை கதையுடன் உங்களை சந்திக்கிறேன். உங்களின்
கருத்துக்கள் வரவேட்கப்படுகின்றன. கருத்துக்களை nesannews @gmail .com இற்கு
அனுப்பி வையுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக