வியாழன், 31 மார்ச், 2011


எழுதுபவர் கலட்டி.கொம் வாசகர்.உங்கள் கருத்து தேவை ....

இன்றைய சமையல்
வாய்ப்பன்
.இதில் வாழைப்பழம் போட்டு செய்பவர்களும் இருக்கிறார்கள் .ஆனால் ஊரில்
உள்ள சாப்பாட்டுக் கடைகளில் ஒருபோதுமே வாழைப்பழம் போடாமல் தான் செய்வார்கள். அது
சாப்பிடும் போது நன்றாக இருக்கும் ,நீங்களும் செய்து பாருங்கள். இது தொதல் போல
கடினம் இல்லை . நீங்கள் இலகுவாக செய்யக் கூடியது .

தேவையான பொருட்கள்

ஒரு சுண்டு வெள்ளை மா (அவிக்காதது )
துருவிய தேங்காய்ப் பூ( பாதித் தேங்காய் போதும் )
சீனி 3 மேசைக் கரண்டி
சிறிதளவு உப்பு
பேக்கிங் பவுடர் அரை தேக்கரண்டி
எண்ணெய் அரை லீட்டர்

செய்முறை

முதலில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் மாவையும், தேங்காய்ப்
பூவையும்,சீனியையும் ,உப்பையும் ,பேக்கிங் பவுடர் ஐயும் போட்டு நன்றாகக் கலந்து
கொள்ளுங்கள் .பின்னர் ஆகக் குளிர் இல்லாத தண்ணீர் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி
ரொட்டிக்கு குழைப்பது போன்று பதமாக குழைத்துக் கொள்ளுங்கள். பிசைந்த மாவில்
சிறிதளவு எண்ணையை ஊற்றி குழைத்து விடுங்கள் .ஏனெனில் மாவை உருண்டைகளாக செய்யும்
போது இலகுவாக இருக்கும் . பின்னர் பிசைந்த மாவை 30 இலிருந்து 45 நிமிடங்கள் வரை
சுத்தமான துணி ஒன்றினால் மூடி வையுங்கள் .அதன் பின்னர் ஒரு தாய்ச்சியை எடுத்து
அடுப்பில் வைத்து அதற்குள் எண்ணையை ஊற்றிகொள்ளுங்கள்.எண்ணெய் சூடானதும் மாவில்
உள்ளங்கை அளவான உருண்டைகளாக செய்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை
பொரித்தெடுங்கள்.அப்புறம் மாலை நேரம் தேநீருடன் உண்டு மகிழுங்கள்.மாலையில் வேலை
என்றால் உங்கள் வேலைத் தலத்தில் கொண்டு போய் சாப்பிடுங்கள்.

Harish Kannaiyan 31 மார்ச் 09:55
ஜெ. - நடிகர் சிங்கமுத்து சந்திப்பு :
வடிவேலுவுக்கு எதிராக பிரச்சாரம்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று 8ம் நாள் பிரச்சாரத்தை தொடங்க சென்னையில் இருந்து புறப்பட்டார். அப்போது நடிகர் சிங்கமுத்து ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக உறுதி கூறினார்.

நடிகர்கள் வடிவேலுவுக்கும், சிங்கமுத்துவுக்கும் இருக்கும் பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் கடுமையாக
மேலும் இவர்கள் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் விமர்சித்துக்கொள்ளும் களமாக அமைகிறது இந்த தேர்தல்.

திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் நடிகர் வடிவேலு, ஜெயலலிதாவையும், தேமுதிக தலைவர் விஜயகாந்தை தாக்கு தாக்குன்னு தாக்கி பேசி வருகிறார்.

இந்நிலையில் வடிவேலுவுக்கு பதிலடி கொடுக்க சிங்கமுத்துதான் சரியான ஆள் என்று முடிவு அவர் களம் இறக்கப்பட்டிருக்கிறார். ஓரிரு நாளில் சிங்கமுத்து பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்.

வடிவேலுவின் இன்னொரு முகத்தை தோலுறித்து காட்டப்போகிறேன் என்று பிரச்சாரத்திற்கு தயாராகிவிட்டார் சிங்கமுத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக