செவ்வாய், 15 மார்ச், 2011

சாந்தை சித்திவிநாயகர் ஆலயத்தில் நடந்தது. என்ன?

இந்து மதத்தின் பிரிவுகளில் ஒன்றான காணபத்தியத்தின் முழுமுதற்கடவுள் கணபதி ஆவார். இந்தியாவிலும் ஈழத்திலும் கணபதிக்கென பல சிறப்பு வாய்ந்த ஆலயங்கள் இருக்கின்றன. அந்த வகையில் ஈழத்திரு நாட்டின் யாழ் பிராந்தியத்தில் அமைந்துள்ள கணபதி ஆலயங்களில் பிரசித்தி பெற்றது. பறாளாய் ஆலயம்.

இந்த ஆலயத்திற்கு அருகே இருக்கும் ஓர் கணபதி ஆலயமே சாந்தை சித்தி விநாயகர் ஆலயம் ஆகும்.
அந்த வகையிற்சிறப்பு மிக்க ஆலயமாக சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் கடந்த சில நாட்களாக அபிவிருத்தி வேலைகள் முன்னொடுக்கப்பட்டுவருகின்றது. ஊரிலே சிறந்து விளங்கும் ஆலயங்கள் சில உள்ளன. அதில் சாந்தை சித்தி விநாயகர் ஆலயமும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவ் அபிவிருத்தி வேலைகளைக் குழப்புவதற்காக பலர் திட்டம் தீட்டி செய்யப்பட்ட ஓர் வேலையே இந்த ஆலயத்தின் விக்கிரங்களினை உடைக்கப்பட்ட செயல் இதற்கு பலரிடதும் உதவி கிடைத்துள்ளது. அதாவது ஊரில் இருக்கும் சில தீய சக்திகள் இதற்கு உடந்தையாகவும் தலையாகவும் இருந்துள்ளது. ஆலயங்களின் அபிவிருத்திலே இடையூறு ஏற்படுத்தியுள்ளமை பலரையும் கவலைக்கு இடமாக்கியுள்ளது. அதாவது கடந்த காலங்களில் இந்த ஆலயத்திலே எந்த வித பொருட்களும் திருட்டுக்கு உள்ளாகவில்லை. திருவிழாக்காலங்களிலும் பல பொருட்கள் இருந்தும் இந்தச் சூழலில் திருட்டுச் சம்பவம் சம்பவம் இடம் பெறவில்லை. அவ்வாறிருந்த போது இவ்வாறான சம்பவம் நடக்கக் காரணம் என்ன? அங்கே உள்ள நிலவரத்தின் படி இரவு வேளையில் உள்ளே ஙழைவதாயின் ஆலயத்தின் சகல இடங்களையும் அறிந்த ஒருவராலே உள்ளே ஙழைந்து உலாவ முடியும். காரணம் ஆலயத்தின் உள்ளே பல இடங்களிலும் பொருட்கள் பரவிவைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அத்திபாரக் கிடங்குகளும் இருந்தன. இவை அனைத்தையும் எங்கெங்கு இருக்கின்றன. என நன்றாகப் பரீட்சையம் வாய்ந்த ஒருவராலே ஆலயத்தினுள் உள்ளே ஙழைந்து அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கை எடுத்துக் கொண்டு உலாவ முடிந்தது.
அது மட்டுமன்றி அங்கே எந்த இடத்தில் ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன. என்பiதயும் அறிந்திருக்க வேண்டும். அங்கே ஆயுதங்களைத் தூக்கிச் செல்வதற்காக செக்ஸ்களைப் பயன்படுத்தியுள்ளார்கள். அது மறுநாள் சிலரின் கைகளில் மாட்டியிருந்தது. அத்துடன் அயல் வீட்டாரின் சைக்கிளையும் களவாடியுள்ளனர். சைக்கிளையும் ஒலிபொருக்கிச் சாதனங்கள் சிலவற்றையும் திருடிச் சென்ற திருடர்களின் கண்களிற்கு விலையுயர்ந்த பொருட்கள் ஏன் படவில்லை? அதுவே பிரச்சனை பல ஆண்டுகளாக அடியார்களின் குடிகொண்ட பிள்ளையாரின் விக்கிரகத்துக்கு என்ன நடந்தது? இதற்கு உடந்தையாக இருந்தவர் யார்? அதற்கான காரணம் என்ன? இதற்கு பல காரணங்கள் அமைகின்றது.
1) ஆலயஅபிவிருத்தியை குழப்புவது
2) ஆலயத்தின் புனிதத்தன்மையை கெடுப்பது
3) ஆலயசூழலில் பதற்றத்தை ஏற்படுத்துவது அதன் மூலம் சில பாதுகாப்பு நடவடிக்கை. எனப் பல்வேறு பட்ட காரணங்கள் இருக்கின்றன. இவ்வாறான அடிப்படைக் காரணங்களிற்காகவே இச் செயலைச் செய்துள்ளனர். அதுவும் தற்போது ஆலயத்திருப்பணிகளிற்காக பலரின் உதவிகள் கிடைக்கப்பட்டடிருக்கும் நேரத்தில் இதைச் செய்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமன்றி ஊர் உறங்கும் வேளையில் பலரது மனதிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக