புதன், 16 மார்ச், 2011


நன்றி வாசகருக்கு .மிசின் கண்டு பிடித்தவுடன் அறியத்தருகிறேன் .

வணக்கம் அண்ணை!!
கலட்டி இணையத்தளம் புதுப்பொலிவுடன் நம்மவர் இணையத்தளங்கள் போல் வலம்வர வேண்டுமென முதற்கண் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்துடன் சமையல் குறிப்பான தொதல் மிக நன்றாக இருந்தது. ஆனால் ஒரே ஒரு கேள்விதான் கிண்டும் நேரம் ஒன்னரை மணித்தியாலத்தை குறைக்க முடியாதா?? அல்லது கிண்டுவதற்கு ஏதாவது மிசின் இருக்கின்றதா?? இலகுவான வழி இருந்தால் அறியத்தாருங்கள்.

சுனாமி இதுதான் சுனாமி


21-ம் நூற்றாண்டின் கம்ப்யூட்டர் உலகின் ஜாம்பவனான பில்கேட்சின் காட்டிலும் நுண்ணறிவுத் திறனில் முன்னிலை வகிக்கிறார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 11 வயது மாணவி ஒருவர்.
இது பற்றிய விபரம் வருமாறு: இங்கிலாந்தை சேர்ந்தவர் விக்டோரியா கவ்வி. இவர் மற்ற மாணவிகளைப்போன்ற வயதுடையவராக இருப்பினும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு காணப்படுகிறார். காரணம் இவரிடம் காணப்படும் அபரிமிதமான அறிவுத்திறனே .
பல ஆயிரம் கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரரான விஞ்ஞானி ஆல்பர்ட் ஐஸ்டீனின் நுண்ணறிவுத்திறன் அளவு 160. பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரும் இதே விகித்தை கொண்டுள்ளனர். ஆனால் விக்டோரியாவின் நுண்ணறிவுத்திறனின் அளவு 162 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விக்டோரியாவிடம் கேட்டபோது எனக்கு இப்படி ஒரு திறமை இருப்பது நம்ப முடியாத ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார். இவரின் நுண்ணறிவுத்திறனுக்கு முன்னால் பல அறிஞர்களின் அறிவித்திறனின் அளவுகள் பின்தங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மாவீரன் நெப்போலியனின் நுண்ணறிவின் அளவு 145, சிக்மண்டு பெர்ரடு 156, மடோனா- 140, ஹிலாரி கிளிண்டன்- 140, பில் கிளிண்டன்-135, நிக்கோலே கிட்மன்-132 என அனைத்து தரப்பினரும் இம் மாணவிக்கு பின்னரே வருகின்றனர்.
புதிர் போட்டியில் அதிக விருப்பம் உள்ளது என தெரிவிக்கும் மாணவி விக்டோரியாவின் விருப்பம் தாவரவியல் பிரிவில் பட்டம் பெற வேண்டும் என்பதே ஆகும்.
இவரின் பெற்றோர் டேவிட் ஆலிசன் தம்பதியினர் வோல்வர்ஹாம்ப்டன் பகுதியை சேர்ந்த கிளாவர்லி நகரில் வசித்து வருகின்றனர். விக்டோரியா தனது வயதுக்கேற்ற குறும்பு தனத்துடன் மட்டுமல்லாது பாடுவது.
நடனம், பியானோ, சாக்ஸோபோன் இசைப்பது, நீந்துவது போன்றவற்றிலும் சிறந்து விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக உயராமான ஆஞ்சநேயர் சிலை தென்னாபிரிக்காவில் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக
தெரியவருகிறது. 601 / 701, Arena Park , Chatsworth. Durban, South Africa என்ற முகவரியில் அமக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும், இச் சிலைத் திறப்புவிழாவின் படங்கள் மின்னஞ்சலில் கிடைக்கப்பெற்றன.


Wednesday, 2011-03-
அநுராதபுரம்,தேவநம்பிய திஸ்ஸ மாவத்தையிலுள்ள (நீராவி பிரதேசம்) பிள்ளையார் கோவிலுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினமிரவு இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக அங்கிருந்த பிள்ளையார் சிலைக்குச் சேதமேற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1983ம் ஆண்டுக்கு முன்னரே அமைக்கப்பட்டிருந்த பிரஸ்தாப கோயில் இதுவரை ஓரளவுக்கு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்திருந்தது. அங்கிருந்த பிள்ளையாரை சிங்கள மக்களும் வழிபட்டு வந்தனர்.
அவ்வாறான நிலையில் கடந்த 14ம் திகதி கோயிலினுள் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலைக்கு இனந்தெரியாதோர் தீவைத்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
சிலையின் கழுத்துப் பகுதியில் பழைய டயர் மற்றும் டியூப் என்பன போடப்பட்டு தீ மூட்டப்பட்டிருந்தது

சாந்தை சித்திவிநாயகர் ஆலயத்தில் நடந்தது. என்ன?

இந்து மதத்தின் பிரிவுகளில் ஒன்றான காணபத்தியத்தின் முழுமுதற்கடவுள் கணபதி ஆவார். இந்தியாவிலும் ஈழத்திலும் கணபதிக்கென பல சிறப்பு வாய்ந்த ஆலயங்கள் இருக்கின்றன. அந்த வகையில் ஈழத்திரு நாட்டின் யாழ் பிராந்தியத்தில் அமைந்துள்ள கணபதி ஆலயங்களில் பிரசித்தி பெற்றது. பறாளாய் ஆலயம்.
இந்த ஆலயத்திற்கு அருகே இருக்கும் ஓர் கணபதி ஆலயமே சாந்தை சித்தி விநாயகர் ஆலயம் ஆகும்.
அந்த வகையிற்சிறப்பு மிக்க ஆலயமாக சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் கடந்த சில நாட்களாக அபிவிருத்தி வேலைகள் முன்னொடுக்கப்பட்டுவருகின்றது. ஊரிலே சிறந்து விளங்கும் ஆலயங்கள் சில உள்ளன. அதில் சாந்தை சித்தி விநாயகர் ஆலயமும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவ் அபிவிருத்தி வேலைகளைக் குழப்புவதற்காக பலர் திட்டம் தீட்டி செய்யப்பட்ட ஓர் வேலையே இந்த ஆலயத்தின் விக்கிரங்களினை உடைக்கப்பட்ட செயல் இதற்கு பலரிடதும் உதவி கிடைத்துள்ளது. அதாவது ஊரில் இருக்கும் சில தீய சக்திகள் இதற்கு உடந்தையாகவும் தலையாகவும் இருந்துள்ளது. ஆலயங்களின் அபிவிருத்திலே இடையூறு ஏற்படுத்தியுள்ளமை பலரையும் கவலைக்கு இடமாக்கியுள்ளது. அதாவது கடந்த காலங்களில் இந்த ஆலயத்திலே எந்த வித பொருட்களும் திருட்டுக்கு உள்ளாகவில்லை. திருவிழாக்காலங்களிலும் பல பொருட்கள் இருந்தும் இந்தச் சூழலில் திருட்டுச் சம்பவம் சம்பவம் இடம் பெறவில்லை. அவ்வாறிருந்த போது இவ்வாறான சம்பவம் நடக்கக் காரணம் என்ன? அங்கே உள்ள நிலவரத்தின் படி இரவு வேளையில் உள்ளே ஙழைவதாயின் ஆலயத்தின் சகல இடங்களையும் அறிந்த ஒருவராலே உள்ளே ஙழைந்து உலாவ முடியும். காரணம் ஆலயத்தின் உள்ளே பல இடங்களிலும் பொருட்கள் பரவிவைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அத்திபாரக் கிடங்குகளும் இருந்தன. இவை அனைத்தையும் எங்கெங்கு இருக்கின்றன. என நன்றாகப் பரீட்சையம் வாய்ந்த ஒருவராலே ஆலயத்தினுள் உள்ளே ஙழைந்து அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கை எடுத்துக் கொண்டு உலாவ முடிந்தது.
அது மட்டுமன்றி அங்கே எந்த இடத்தில் ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன. என்பiதயும் அறிந்திருக்க வேண்டும். அங்கே ஆயுதங்களைத் தூக்கிச் செல்வதற்காக செக்ஸ்களைப் பயன்படுத்தியுள்ளார்கள். அது மறுநாள் சிலரின் கைகளில் மாட்டியிருந்தது. அத்துடன் அயல் வீட்டாரின் சைக்கிளையும் களவாடியுள்ளனர். சைக்கிளையும் ஒலிபொருக்கிச் சாதனங்கள் சிலவற்றையும் திருடிச் சென்ற திருடர்களின் கண்களிற்கு விலையுயர்ந்த பொருட்கள் ஏன் படவில்லை? அதுவே பிரச்சனை பல ஆண்டுகளாக அடியார்களின் குடிகொண்ட பிள்ளையாரின் விக்கிரகத்துக்கு என்ன நடந்தது? இதற்கு உடந்தையாக இருந்தவர் யார்? அதற்கான காரணம் என்ன? இதற்கு பல காரணங்கள் அமைகின்றது.
1) ஆலயஅபிவிருத்தியை குழப்புவது
2) ஆலயத்தின் புனிதத்தன்மையை கெடுப்பது
3) ஆலயசூழலில் பதற்றத்தை ஏற்படுத்துவது அதன் மூலம் சில பாதுகாப்பு நடவடிக்கை. எனப் பல்வேறு பட்ட காரணங்கள் இருக்கின்றன. இவ்வாறான அடிப்படைக் காரணங்களிற்காகவே இச் செயலைச் செய்துள்ளனர். அதுவும் தற்போது ஆலயத்திருப்பணிகளிற்காக பலரின் உதவிகள் கிடைக்கப்பட்டடிருக்கும் நேரத்தில் இதைச் செய்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமன்றி ஊர் உறங்கும் வேளையில் பலரது மனதிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு பதுளை வீதியில் (ஏ5) உள்ள செங்கலடி கறுத்தப் பாலம் இன்று இரண்டாக பிளந்துள்ளது. இதனால் மட்டக்களப்பு பதுளை கரடியனாறு புல்லுமலை ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்துக்கள் முற்றாக தடைப்பட்டுள்ளது.

இப்பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 100 வருடங்கள் பழமை வாய்ந்தாகும்.

கிழக்கு மாகாணத்தின் சீன நிறுவனத்தினால் வீதிகள், பல பாலங்களும் புனரமைக்கப்பட்டு வரும் நிலையில் இப்பாலத்திற்கு இப்போதைக்கு எதுவித பாதிப்புக்களும் ஏற்படாது என பொறியலாளர்கள் தெரிவித்ததனால் இப்பாலத்திற்கான வேலைகள் மாத்திரம் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இப்பிரதேசம் வயல்கள் நிறைந்து காணப்படுவதனால் பெரும்பாலான விவசாயிகள் இப்பாலத்தினையே பயன்படுத்தி வருகி்ன்றனர். அது மாத்திரமில்லாமல் பிரதேச மாணவர்களும் இப்பாலத்தைப் பயன்படுத்துவதனால் பாலம் பிளவுபட்டுள்ளதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்களில் இருந்து எஞ்சிய வயல்களின் அறுவடை தற்போது நடைபெற்று வரும் நிலையில், இப்பாலத்தின் இணைப்புப் பகுதியில் பிளவு ஏற்பட்டுள்ளதானது இப்பிரதேச விவசாயிகள் மத்தியிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனவே இப்பாலத்தினை விரைவாக புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எவண்டி உன்ன பெத்தான் ,அவன் கைல கிடச்சா செத்தான் ....


தமிழில் வானம் படத்தில் இடம்பெற்றுள்ள ‘எவன்டி உன்ன பெத்தான்… » என்ற பாடல் இந்தியில் ஆல்பமாக எடுக்கப்பட இருக்கிறது. இந்த ஆல்பத்தை ஒரு கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக எடுக்க இருக்கின்றனர்.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘வேதம்’ படம் தமிழில், ‘வானம்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் சிம்பு ஹீரோவாகவும், அனுஷ்கா ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர்.
படத்தில் சிம்பு தானே, ஒரு பாடல் ஒன்றை எழுதி பாடியுள்ளார். « எவன்டி உன்ன பெத்தான்… பெத்தான்… கையில கிடைச்சா செத்தான்… செத்தான்… » என்று ஆரம்பிக்கும் இப்பாடல் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீசானது.
யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்திருக்கும் இப்படால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்னர்தான் இப்பாடலுக்கு மகளிர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பாடல் பெண்களை இழிவு படுத்துவதாகவும், ராகிங் செய்பவர்களுக்கு ஏதுவாக இருப்பதாகவும், தொடர்ந்து சிம்பு இதுபோன்று பெண்களை இழிவுபடுத்துவதாகவும் குற்றம் சாட்டி இருந்தனர்.
இதனிடையே இப்பாடலை கேட்ட பாலிவுட் நிறுவனம் ஒன்று, இந்தியில் ஆல்பமாக தயாரிக்க சிம்புவிடம் கேட்டுள்ளது. பாலிவுட் என்றதும், ஓ.கே. சொல்லிய சிம்பு, இப்பாடலுக்கான வேலையில் இறங்கியுள்ளார்.
மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட இருக்கும் இந்த ஆல்பத்தில் சிம்புவே பாடலை எழுதி, பாடி, ஆடவும் இருக்கிறார். இவருடன் லண்டனை சேர்ந்த 30 நடன கலைஞர்களும் ஆட இருக்கின்றனர்.
ரூபாய் 1கோடி செலவில் எடுக்கப்படும் இந்த ஆல்பத்தை, பிரபல நடன இயக்குநர் அகமது கான் டைரக்ட் செய்கிறார்.
‘எவன்டி உன்ன பெத்தான், அவன் கைல கிடைச்சா செத்தான்’… என்ற அந்த கன்னுறாவி பாடலை நீங்களும் கொஞ்சம் கேட்டுப்பாருங்கோ.. அப்படி என்னதான் இந்த பாடலில் புதுமையாக இருக்கோ தெரியவில்லை… சிம்புவும் , யுவனும் குப்பைகளை கொண்டுவந்து கொட்டுறாங்கள்… கொட்டுறாங்கள்… கொட்டுறாங்கள்..!

இந்த தத்துவ பாடலை கேளுங்கள் ....

நமது ஊர் உண்மை சம்பவம் எழுதுபவர் நியூஸ்நேசன்.கொம் வாசகர்

திசை மாறிய பறவை பாகம் 3

தனிமை வாழ்வின் கொடுரமும் ,கடந்த கால வாழ்க்கை தந்த வேதனையும் மறக்க முடியாமல்
அவள் மனதளவில் மிகவும் துயருற்றாள். இதற்கு மாற்றாக தனிமையின் கொடுமையில் இருந்து
விடுபட அவள் தானே ஒரு வழியைத் தேடிக் கொண்டாள். அவளது கணவன் எந்த மது
பழக்கத்திற்கு அடிமையாகி அவளது வாழ்க்கைக்கு எமனாக இருந்தானோ, அதே மதுப்
பழக்கத்திற்கு அவளும் ஆளாகினாள்.யாரைப் பற்றியும் எவரைப்பற்றியும் கவலைப்படாமல்
உல்லாச வானில் சிறகடித்துப் பறந்தாள். அது மட்டுமா அவளின் இப்படிப்பட்ட நடத்தைகளை
கேள்விப்பட்ட அவளது உறவுக்கார வாலிபர்களும் அவளை தங்கள் தேவைக்கு பகிர்ந்து கொள்ள
எண்ணினர்.


ஆண்டுகள் பல உருண்டோடின.அவளின் மகளுக்கு பெற்றோர்களே பார்த்து ஒரு மாப்பிள்ளைக்கு
கட்டி வைத்தனர். மணப்பெண்ணின் தாயாரின் கேவலமான நடத்தை பற்றி கேள்விப்பட்ட
மணமகன் வீட்டினர் ,அவளை வீட்டை விட்டே துரத்திவிட்டனர். ஆனால் அவள் எங்கு
இருக்கிறாள் என்பது பற்றி யாராலுமே அறிய முடியவில்லை .நன்றாக வாழ வேண்டிய ஒரு
குடும்பத்தின் வாழ்க்கை ,மதுவிற்கு அடிமையாகி எப்படி சீரழிந்து திசை மாறிப்
போயிற்று.இது யார் குற்றம் ? திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பதை
மனதில் கொண்டு ,தங்கள் பிள்ளைகளுக்கு தகுதியான துணையை பெற்றோர் முடிவு செய்ய
வேண்டும் .அப்படி செய்தால் தான் இது போன்ற திசை மாறிய பறைவைகள் உருவாகாமல் தடுக்க
முடியும்.

இத்துடன் திசைமாறிய பறவை உண்மைக் கதை முற்றுப் பெறுகின்றது. தொடர்ந்து அடுத்த
வாரம் முதல் இன்னும் ஒரு மாறுபட்ட உண்மை கதையுடன் உங்களை சந்திக்கிறேன். உங்களின்
கருத்துக்கள் வரவேட்கப்படுகின்றன. கருத்துக்களை nesannews @gmail .com இற்கு
அனுப்பி வையுங்கள்.
பிரபல வில்லன் நடிகரும் ஈழஆதரவாளருமான மன்சூர்அலிகான் தமிழ்பேரரசு என்கிற அமைப்பைத்தொடங்கவுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாகபோட்டியிடுகிறார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

அரசியல் கட்சிகள் வாக்காளர்களை மறந்து விட்டன. எந்த கட்சியுடன் கூட்டணிவைப்பது எவ்வளவு தொகுதிகள் ஒதுக்குவது என்பதில் தான் கவனம்செலுத்துகின்றன.

தேர்தல் முடிந்ததும் உறவை தேனிலவு முடிந்தது என்று சொல்லி உறவைமுறித்து விடுவர். இது போன்ற செயல்கள் எனக்கு ஆத்திர மூட்டியுள்ளது.

எனவே எந்த கட்சியிலும் சேராமல் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவுசெய்துள்ளேன். எந்த தொகுதியில் நிற்பேன் என்பதை ஓரிரு தினங்களில்அறிவிப்பேன்.

ஏற்கனவே 1999 பாராளுமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டுஆயிரத்து 546 வாக்குகள் வாங்கியுள்ளேன்.

அதன் பிறகு திருச்சி பாராளுமன்ற தேர்தலிலும் நின்றேன். முக்கிய ஆளும் கட்சிஅங்கு தோற்பதற்கு நான் காரணமாக அமைந்தேன். இந்த முறை நான் நிச்சயம்வெற்றி பெறுவேன்.

நான் சட்டமன்றத்துக்கு சென்றால் ஆளும் கட்சியின் கால்களில் விழுந்தாவதுதொகுதி மக்களின் குறைகளை தீர்க்க பாடுபடுவேன். புளி வியாபாரம், வத்தல்வியாபாரம் செய்பவர்களின் பணத்தையெல்லாம்.

தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பிடுங்குகிறார்கள். உண்மையாகவே பணத்தைகடத்துபவர்கள் இவர்களிடம் மாட்டுவது இல்லை.

தமிழர் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. வெளி மாநிலத்தவர் தான் இங்குஆதிக்கம் செய்கின்றனர். தேர்தலுக்கு பிறகு தமிழர்களுக்கு உதவுவதற்காக தமிழ்பேரரசு என்ற அமைப்பை துவங்க இருக்கிறேன்.
88
முல்லைத்தீவில் கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவர் 3 நாட்களின் பின்னர் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையான கே.சந்திரமோகன் வயது 34 என்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். கடந்த 11ம் திகதி கடலுக்கு தனியே இவர் சென்றிருந்தார். பின்னர் இவர் கரைக்கு திரும்பவில்லை இந்நிலையில் இவரை கடந்த 3 நாட்களாக தேடிவந்த நிலையிலேயே இவர் இன்றைய தினம் அலம்பில் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் முல்லைத்தீவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இது தொடர்பில் தண்ணீரூற்றுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொணவருகின்றனர்.
எல்லை கடந்த வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு என்பன தொடர்பான யோசனைகளையும், கருத்துக்களையும் முன்வைக்குமாறு கனடா சமஷ்டி அரசாங்கம் கனேடிய பிரஜைகளைக் கேட்டுள்ளது.

எல்லையை எவ்வாறு நிர்வகிக்கலாம் என்பது பற்றிய அமெரிக்க - கனடா கூட்டுத் திட்டம் தொடர்பான ஆலோசனைகள் தற்போது பெறப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டம் குறித்து கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பரும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் கடந்த மாதம் அறிவித்திருந்தனர்.

கனேடியர்கள் தமது எண்ணங்களை இணையத்தளம் மூலமாக www.borderactionplan.gc.ca. என்ற இணையத்தளத்தில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.இதற்கான கால அவகாசம் ஏப்பிரல் 21 வரையாகும். அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கும் அவற்றின் பொருளாதாரங்களைப் பொறுத்த மட்டில் எல்லைப் பகுதி மிகவும் முக்கியமானது என்று சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் பீட்டர் வேன்லோன் தெரிவித்துள்ளார்.

இந்த எல்லையை தினசரி சுமார் 2 லட்சம் மக்கள் கடக்கின்றனர். அதேபோல் 1.8 பில்லியன் பெறுமதியான பொருட்களும் தினசரி எல்லையைக் கடக்கின்றன.
திங்கட்கிழமை, 14
யாழ். உடுவில் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டடுள்ளது. கைதடி நுணாவில் சாவகச்சேரியைச் சேர்ந்த 17வயதுடைய மனோகரன் கலைவாணி என்ற பாடசாலை மாணவியே மர்மமான முறையில் மரணமாகி நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கைதடி நுணாவில் சாவகச்சேரியைச் சேர்ந்த இந்த மாணவி தான் கல்வி பயிலும் பாடசாலைக்கு சாவகச்சேரியில் இருந்து தினமும் சென்று வருவது சிரமம் என்பதால் தாயாருடன் உடுவிலில் தங்கியிருந்து கல்வி கற்று வந்துள்ளார்.
சனிக்கிழமை மாணவியின் தாயார் சாவகச்சேரியில் மரண வீடொன்றுக்கு சென்ற சமயமே இந்த மாணவி மர்மமான முறையில் மரணமாகி உள்ளார். பின்னர் இவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
மாணவி கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் காணப்படுவதாக யாழ் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்மைக்காலமாக யாழ் குடாநாட்;டில் கொலை. கொள்ளை. பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் மத்தியில் அச்சமும் பதட்டமான சூழ்நிலைமையும் மேலோங்கியுள்ளன.

12th OF MARCH 2011 KALAM.mpg

ஜப்பானில் சுனாமிக்கு முன் சுனாமிக்கு பின் நீங்களும் பாருங்கள் வித்தியாசத்தை எப்படி இருந்தது இப்படி ஆச்சே ..ஜப்பான் சுனாமிக்கு முன்னரும் பின்னரும் அதிர்ச்சிதரும் புகைப்படங்கள்

சாந்தை சித்திவிநாயகர் ஆலயத்தில் திருடர்களின் கை வரிசை பின்னணியில் பெரும் சதி இருப்பதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.படம் சேகர். S

முதலையின் வயித்தில் இருந்து எடுத்த மீதி மனிதனின் உடல் .


Stand back when you fish!
ATT001466.jpg
ATT001311.jpg
Lots of good meat there after you skin this one out:
ATT001342.jpg
Check out the stomach contents in this guy.
ATT001435.jpg
ATT001373.jpg
Looks like someone was fishing too close to the water.
ATT001404.jpg

சாந்தை சித்திவிநாயகர் ஆலயத்தில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுஉள்ளது .ஊரில் இருந்து நியூஸ்நேசன்.கொம் இற்கு நிவர்சன்


சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் நேற்றைய (12.03.2011) தினம் மர்மச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இரவு சுமார் பத்தினொரு மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றதாக அயல் வீட்டு நிர்வாகி தெரிவித்தார். இனம் தெரியாத கும்பல் ஒன்று உள்ளே ஙழைந்ததாகவும் அவர்கள் மூலமூர்த்தியினை பேர்த்துள்ளதாகவும் பின்னர் காவற்தெய்வம் பைரவரையும் பேர்ததாகவும் தெரியப்படுகின்றது.
இன்றைய தினம் (13.03.2011) காலை 4.30 மணியளவில் ஆலய நிர்வாகி சடாச்சரம் ஆலயமணி அடிப்பதற்காக சென்றவேளையிலே இவற்றைக் கண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அயல் வீட்டில் வசிக்கும் ஆலய நிர்வாகத் தலைவரிடம் சென்று செல்கையில் அவரில் வீட்டில் துவிச்சக்கரவண்டி ஒன்றும் காணாமப் பேயுள்ளது. இதனைத் தெடர்ந்து பலருக்கும் அறிவிக்கப்பட்டது. அங்கே சென்று பார்க்கையில் ஆலயத்தின் மூலமூர்த்தி (பிள்ளையார் விக்கிரகம்) அதே இடத்தில் அசைக்கப்பட்ட நிலையிலும். பிள்ளையாரின் தும்பிக்கை உடைக்கப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. அத்துடன் உள்ளே ஙழைவதற்காக விக்கிர மூர்த்தியின் கதவை மிகவும் கொடூரமான முறையில் தள்ளப்பட்டுள்ளது. அத்துடன் பைரவரின் விக்கிரகத்தை அசைக்கப்பட்டும் உள்ளது. ஆலயத்தின் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறையினுள் ஓட்டைக் களற்றி இறங்கியுள்ளனர். அங்கே இருந்த ஒலி பெருக்கிப் பொருட்கள் சிலவற்றை சூறையாடிச் சென்றதாக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அத்துடன் அங்கே வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்களைக் கொண்டு கதவு உடைத்ததாகவும் தெரிவித்தனர்
சாந்தை சித்தி விநாயகர் ஆலயம் தற்போது புனர் நிர்மான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை அனைவரும் அறிந்த விடயமே. ஆனால் இவ்வாறான வேலைகளைக் குழப்புவதற்காகவும் ஆலயத்தை சீர் கெடுப்பதற்காகவும் இவ்வாறான வேலைகள் நடைபெற்றிருக்கலாம் என ஆலய அர்சகர் தெரிவித்தார். அத்துடன் ஆலயத்தில் கடந்த காலத்தில் வேலை செய்துகொண்டிருப்பவர்களின் செயலாகவும் இது இருக்கலாம் என ஆலயத்தை அண்டி வாழும் அடியார்கள் தெரிக்கின்றனர். அது மட்டுமன்றி சாந்தைச் சூழலில் இராணுவம் நிலை கொள்வதற்காக இவ்வாறான வேலைகளைச் செய்திருக்கலாம். எனவும் விசனம் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் இன்றைய தினம் பொலீஸாரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர்கள் வந்து பார்வையிடுவார்கள் எனவும் ஆலயநிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக