ஞாயிறு, 13 மார்ச், 2011

சாந்தை சித்திவிநாயகர் ஆலயத்தில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுஉள்ளது .ஊரில் இருந்து நியூஸ்நேசன்.கொம் இற்கு நிவர்சன்


சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் நேற்றைய (12.03.2011) தினம் மர்மச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இரவு சுமார் பத்தினொரு மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றதாக அயல் வீட்டு நிர்வாகி தெரிவித்தார். இனம் தெரியாத கும்பல் ஒன்று உள்ளே ஙழைந்ததாகவும் அவர்கள் மூலமூர்த்தியினை பேர்த்துள்ளதாகவும் பின்னர் காவற்தெய்வம் பைரவரையும் பேர்ததாகவும் தெரியப்படுகின்றது.
இன்றைய தினம் (13.03.2011) காலை 4.30 மணியளவில் ஆலய நிர்வாகி சடாச்சரம் ஆலயமணி அடிப்பதற்காக சென்றவேளையிலே இவற்றைக் கண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அயல் வீட்டில் வசிக்கும் ஆலய நிர்வாகத் தலைவரிடம் சென்று செல்கையில் அவரில் வீட்டில் துவிச்சக்கரவண்டி ஒன்றும் காணாமப் பேயுள்ளது. இதனைத் தெடர்ந்து பலருக்கும் அறிவிக்கப்பட்டது. அங்கே சென்று பார்க்கையில் ஆலயத்தின் மூலமூர்த்தி (பிள்ளையார் விக்கிரகம்) அதே இடத்தில் அசைக்கப்பட்ட நிலையிலும். பிள்ளையாரின் தும்பிக்கை உடைக்கப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. அத்துடன் உள்ளே ஙழைவதற்காக விக்கிர மூர்த்தியின் கதவை மிகவும் கொடூரமான முறையில் தள்ளப்பட்டுள்ளது. அத்துடன் பைரவரின் விக்கிரகத்தை அசைக்கப்பட்டும் உள்ளது. ஆலயத்தின் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறையினுள் ஓட்டைக் களற்றி இறங்கியுள்ளனர். அங்கே இருந்த ஒலி பெருக்கிப் பொருட்கள் சிலவற்றை சூறையாடிச் சென்றதாக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அத்துடன் அங்கே வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்களைக் கொண்டு கதவு உடைத்ததாகவும் தெரிவித்தனர்
சாந்தை சித்தி விநாயகர் ஆலயம் தற்போது புனர் நிர்மான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை அனைவரும் அறிந்த விடயமே. ஆனால் இவ்வாறான வேலைகளைக் குழப்புவதற்காகவும் ஆலயத்தை சீர் கெடுப்பதற்காகவும் இவ்வாறான வேலைகள் நடைபெற்றிருக்கலாம் என ஆலய அர்சகர் தெரிவித்தார். அத்துடன் ஆலயத்தில் கடந்த காலத்தில் வேலை செய்துகொண்டிருப்பவர்களின் செயலாகவும் இது இருக்கலாம் என ஆலயத்தை அண்டி வாழும் அடியார்கள் தெரிக்கின்றனர். அது மட்டுமன்றி சாந்தைச் சூழலில் இராணுவம் நிலை கொள்வதற்காக இவ்வாறான வேலைகளைச் செய்திருக்கலாம். எனவும் விசனம் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் இன்றைய தினம் பொலீஸாரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர்கள் வந்து பார்வையிடுவார்கள் எனவும் ஆலயநிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக