ஞாயிறு, 20 மார்ச், 2011


[Monday, 2011-03-21
லிபியா பெங்காசி நகரில் பாரிய வெடிச்சத்தங்களும் குண்டு வெடிப்புகளும் சரமாரியாக தீர்க்கப்பட்டன. யுத்தம் மும்மரமாக புரட்சியாளர்களுக்கும் கடாபியின் இராணுவத்தினருக்குமிடையில் நடந்து கொண்டிருந்தது. இரவு 20 மணிக்கு தனது இராணுவத்தினர் யுத்தநிறுத்தத்தை மேற்கொள்வார்கள் என்று கடாபி அறிவித்தபின் இச் சண்டைகள் 21 மணியளவில் ஓய்வுககு வந்துள்ளன.
இங்கு சில நகரங்களை மீட்ட கடாபியின் இராணுவத்தினர் மீட்கப்பட்ட மக்களோடு நிற்கின்றனர். இருப்பினும் அங்கு தேசிய இராணுவம் நிற்பதால் அப்பகுதிக்குச் சர்வதேசக் கூட்டுப்படைகள் தாக்குதல் நடாத்தலாம் எனவும் அதில் தாங்களும் அழிய நேரிடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர். கூட்டுப்படைகளின் தாக்குதல் மக்களை அச்சம் கொள்ள வைத்திருப்பது இதிலிருந்து தெரிகின்றது.
அதே நேரம் கடாபியின் மாளிகையருகே ரிறிப்ஃலில் பாரிய தாக்குதல் ஒன்றை சர்வதேசக் கூட்டுப்படைகள் கடலிலிருந்து மேற்கொண்டுள்ளனர். அங்கு பெரும் புகை மண்டலமாக உள்ளது. அந்தப் பகுதியிலேயே கடாபியும் தங்கியுள்ளார். தாக்குதல்களின் பின்னர் கடாபியின் வான் பாதுகாப்புப் பொறிகள் இயங்கின. இவர்களிடம் இருக்கும் S4 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சர்வதேசக் கூட்டுப்படைகளின் விமானங்களிற்கு பாரிய சவாலாக இருக்கும் என அமெரிக்க வான்படைத் தளபதி கூறியுள்ளார் இருப்பினும் அப்படியான வான்பொறிமுறைத் தளங்களைத் தாம் தாக்கியழித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக