புதன், 6 ஏப்ரல், 2011

பண்கலைக்கூடத்தின் முடிவு வரவேற்க்கலாம்.

பண்கலைக்கூடத்தின் முடிவு வரவேற்க்கலாம்.ஆனால் பணிப்புலம் வாசிகசாலை விடயத்தில் மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என புரியாமல் உள்ளது.ஓம் என்பதும் இல்லை என்பதும் உங்கள் உரிமை உங்கள் வளமையுமாகும்.இதை விட தற்ப்போது சமூக மேம்பாட்டு அபிவிருத்தி திட்டம். பணிப்புலம்,காலையடி,காலையடிதெற்
க்கு,சாந்தை என பெயர்மாற்றம் பெற்றுள்ளதால் இதையும் கவனத்தில் எடுக்கவேண்டும்.ஆனாலும் ஊரின் அமைப்புகள் அந்த ஊரில் எல்லாப்பணிகளையும் சமமாக பார்த்து உதவிக்கரம் கொடுப்பதே நன்று.உங்கள் பாகுபாடானபோக்கு பலரிடம் பல கேள்விகளை இன்று கனடாவில் உருவாக்கியுள்ளது. மறுமலர்ச்சியான்

தமிழ்ச் சினிமாவின் பிரபல நடிகை சுஜாதா அவர்கள் சென்னையில் காலமானார்.

தமிழ்ச் சினிமாவின் பிரபல நடிகை சுஜாதா அவர்கள் சென்னையில் காலமானார்.

அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் திரையுலகத்திற்கு வந்த நடிகை சுஜாதா, ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அன்னக்கிளி, அவர்கள், அந்தமான் காதலி, விதி ஆகிய படங்கள் சுஜாதா நடித்த பிரபலமான படங்கள்.

1952ல் இலங்கையில் பிறந்த சுஜாதாவின் தாய் மொழி மலையாளம். கடந்த சில தினங்களாக உடல் நலம் குன்றி இருந்த அவர் சென்னையில் இன்று காலமானார்.

ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்த சுஜாதா மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

முன்னணி நடிகர்களான சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்டவர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக