செவ்வாய், 12 ஏப்ரல், 2011

இதுபோல் ஊர் பற்றாளர்கள் தான் எமது ஊருக்கு தேவை ,

பண்ணையில் மாடுவளர்ப்பும் புலம் பெயர்மண்ணில் அமைப்புகளும்.                 மேற்க்கு நாடுகளில் பல கட்டுப்பாட்டுக்களுடன் மாட்டுபண்ணை நடாத்துகிறார்கள்.பல தரப்பட்ட சுகாதார பரிசோதனைகள் செய்தே பண்ணை நடத்த அனுமதிவளங்கப்படும்.பெரும் பண்ணைகளில் மாட்டை பகலில் ஒரு பெரும்வயல்வெளியில் மேயவிடுவார்கள். மேயும் இடத்தில் சுற்றிவர கம்பிகள் வேலிபோல் போடப்பட்டு மின்சாரம் பாய்ச்சுவார்கள்.அதாவது மாடு வேறு வயல்களுக்கு செல்லாத வகையிலே செய்வது வளக்கம்.இதே போல்தான் மாட்டை பண்ணைக்குள் திருப்பி கொண்டு போகும்போது சில மாடுகள் தன்பாதையை மாத்தி சென்றால் பண்ணையாளர் ஒருமாதிரி தட்டி மற்றமாட்டோடு ஒன்று இணைத்து பண்ணைக்குள் கொண்டுபோய்விட்டுவிடுவார்கள்.
ஐந்தறிவு கொண்ட இனம் எப்படி ஒற்றுமை என்பது தெரிந்த எம்மிடம் ஆற அறிவு மனிதர் தம்மிடம் கொண்டுள்ளார்களா?            புலம் பெயர் மண்களில் எம்மவர்கள் நாட்டுக்குநாடு  ஊருக்கு உதவுவோம் என சங்கங்கள் உருவாக்கியுள்ளோம், உருவாக்குகின்றோம், உருவாக்கமுனைகின்றோம். உருவாக்கி நடாத்திக்கொண்ட சங்கங்கள் சாதித்தது என்ன? சாதிக்கநினைப்பது என்ன? செய்வோம் என்பார்கள் ஏதோ ஒரு காரணம் பிடித்து ஒதுங்குகிறார்கள் ஏன்? உருவாகிய புது அமைப்புகள் என்ன செய்கிறார்கள் என்றால் இதற்க்கு பதிலே இல்லை என்பதை விட அவர்களுக்கே தெரியுமா என்பது மறு வினா? தொடங்க இருப்பவர்கள் ஏன் தொடங்க எண்ணுகிறார்கள் அங்கை தொடங்கிவிட்டினம், இஞ்சை தொடங்கிவிட்டினம். ஒன்றுகூடல்லை பேய்ப்பம்பல் , இப்படி இணையங்கள் படங்களை உடனுக்கு உடன் போட ஏன் நாங்களும் தொடங்க பலர் முனைகின்றோம். எங்களை பல வேறு ஊரவர்கள் சொல்வார்கள் பணிப்புலத்தான் மாதிரி ஒரு ஊர் ஒற்றுமைக்கு இன்னும் ஒரு ஊர் கூட இல்லை என்பார்கள்.இதை கேட்டால் காதுக்கு இனிமையாக இருக்கும்.ஆனால் எமது ஊரில் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் இன்று ஊரிலேயே பல முட்டுக்கட்டைகளை சந்திக்கின்றன ஏன்? புலம் பெயர்நாடுகளில் பணம் சேகரிப்புக்கு ஏதாவது ஒரு நாட்டில் எங்கள் அமைப்புக்க்கள் முன்வந்ததா இல்லையே.கடைசியில் புலம் நாட்டில் எந்த ஒரு திட்டத்துக்காவது ஆர்வலர் முன் வருவார்கள் அவர்கள் ஆரம்பிக்கும்போது அமைப்புக்கள் பல சட்டதிட்டங்கள் போட்டு ஆரம்பித்த விடயம் எங்கு தொடங்கினோமோ அதே இடத்தில் வந்து நிற்க்கும். சில நாடுகளில் சங்கமே இருக்காது திட்டங்கள் அனைத்துக்கும் நிதி உடனுக்கு உடன் அங்கு செல்கிறது.சங்கங்கள் ஒன்றுகூடல்களை செய்யமுனையும் போது மட்டும் எந்த வாக்குவாதமும் இல்லாமல் ஏகமனதான முடிவுடன் நிறைவேற்றுகின்றோம்.இது சாத்தியம் என்றால் ஏன் ஊர் நோக்கியதிட்டங்கள் மட்டும் விதண்டாவாதமாகவும், எடுக்கும் முடிவுகள் மாற்றம் பெறுகின்றது இது எம்மால் ஒற்றுமையாக செயல்ப்படமுடியாதா இல்லை செயல்ப்படுத்த தடைகள் என்ன என ஆராயமுடியாதா.ஆறு அறிவுள்ள எம்மால் ஒரு எல்லை நோக்கி செல்லமுடிகிறதா? செல்லும்பாதையில் எத்தனை தடைக்கற்க்கள் இவை அனைத்துமே பெரும் தடைகள் பல செயற்ப்பாடுகளுக்கு தடை போடப்பட்டுள்ளது.ஆனால் எமது ஒற்றுமைக்கு வரும் தடைக்கற்க்கள் அகற்றப்படவேண்டும்.இவைகள் அகற்றினால் மட்டுமே எமது ஊருக்கும் நல்லது புலம் பெயர்வாழ் மக்களுக்கும் நல்லது.ஆறு அறிவுள்ள மனிதனாய் வாழ்வோம்.                    மனிதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக