ஞாயிறு, 24 ஏப்ரல், 2011


நெதர்லாந்து பண்-முக ஒன்றிய  நிர்வாகக்குழுத்தலைவர்  நன்றி பாராட்டுதல். 
16.04.2011 அன்று நெதர்லாந்து பண்-முக ஒன்றியம் நடாத்திய எமது ஒன்றுகூடல் நிகழ்வுகளை நேரஞ்சலாகவும், ஒளிப்பதிவாகவும் உலகெங்கும் பரந்துவாழ்ந்து பார்த்து ரசித்த எம்மவர்களுக்கும், பார்த்து ரசித்து எம்மை பாராட்டி பரவசம் அடைய வைத்தவர்களுக்கும், பரந்துவாழ்ந்தாலும் இந்நெதர்லாந்தில் பறந்துவந்து எம் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு களிப்புற்றவர்களுக்கும், கலந்துகொள்ளமுடியாமல் போனவர்களுக்கும், கல கலவென சிரித்து கை தட்டி கலை நிகழ்ச்சிகளுக்கு கைதூக்கிவிட்டவர்களுக்கும், கண்டபடி ஓடித்திரிந்தாலும் கடவுளுக்குசமமான கடைக்குட்டிகளுக்கும், காசுகொடுத்து பங்களிப்பு செய்த கனவான்களுக்கும். இந்நிகழ்ச்சிகளை கடல்கடந்து எம்மவர்களின் கண்களுக்கு விருந்தாக்கிய இவ்விணைய  நிர்வாகிகளுக்கும், முக்கியமாக இவ்விணையத்தின் மூலம் எம்மை பாராட்டுமழையில் நனையவைத்த பாசமிகு உறவுகளுக்கும் நெதர்லாந்து பண்-முக ஒன்றியத்தின் நிர்வாகக்குழுவினரின் பல்லாயிரம் கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு சச்சிதானந்தன், தலைவர் நெதர்லாந்து பண்-முக ஒன்றியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக