வியாழன், 5 மே, 2011

தென்னை மரத்தில் ஒளியுடன் கண்கள் தோன்றிய அதிசயம் ஒன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் நிகழ்ந்துள்ளது.தென்னை மரத்தில் ஒளியுடன் கண்கள் தோன்றிய அதிசயம் ஒன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் நிகழ்ந்துள்ளது. உரும்பிராய் மேற்கிலுள்ள ஒருவரின் வீடு அமைந்துள்ள காணியில் இருக்கும் தென்னையிலேயே தற்போது இரண்டு கண்களுடனும் புருவத்துடனும் இவ்வதிசயம் காணப்படுகிறது.

மக்கள் அலையலையாய இதனைச் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இது தொடர்பாக வீட்டு உரிமையாளர் திருமதி ரமேஸ்வரன் கூறுகையில், இந்த தென்னங்கன்றுடன் இன்னும் பல தென்னங்கன்றுகளையும் நட்டிருந்தோம் அதில் குறித்த தென்னையைவிட ஏனைய மரங்கள் காய்க்க தொடங்கி விட்டன.


ஆனால் இது மட்டும் காய்க்கவில்லை. அத்துடன் நோய்த்தாக்கத்துக்குள்ளாகியும் இருந்தது. இதனால் இதை தறிக்க முற்பட்டபோது தென்னையிலிருந்து ஒளி தென்பட்டது உடனே தறிப்பதை நிறுத்தி விட்டேன்.அதன் பின் சென்று பார்த்தபோது ஒரு கண் மட்டும் தென்பட்டது. பின்பு மீண்டும் இரண்டு கண்களும் புருவமும் தென்பட்டது. பின்னர் தென்னங்கன்றின் பின்புறத்திலும் கண்களும் புருவமும் தென்பட்டது என்றார்.

  முகப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக