வியாழன், 12 மே, 2011

துபாயிலுள்ள உலகின் மிகவும் உயரமான கட்ட டத்திலிருந்து குதித்து இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


துபாயிலுள்ள   உலகின் மிகவும்   உயரமான   கட்ட டத்திலிருந்து    குதித்து   இளைஞர்   ஒருவர்  செவ்வாய்க்கிழமை   தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
2,717 அடி உயரமான புர்ஜ் கலீபா கட்டடத்தின் 147 ஆவது மாடியிலிருந்து 108 ஆவது மாடியில் குதித்து மேற்படி இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பி டத்தக்கது.
மேற்படி கட்டடத்தின் உரிமையாளர்களான  ‘எமார் புரொபர்ட்டீஸ் நிறுவனம், ஆசியாவை சேர்ந்தவர் என நம்பப்படும் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண் டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி  மாதம் திறந்து வைக்கப்பட்டமேற்படி 160 மாடி கட்டடத்திலிருந்து ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட முதலாவது சம்பவமாக இது விளங்குகிறது.
தனது   நிறுவன மேலதிகாரியுடன்   ஏற்பட்ட    வாக்குவாதத்தையடுத்தே மேற்படி நபர் குதித்ததாக கூறப்படுகிறது.   தன்னால் கோரப்பட்ட விடுமுறையை நிறுவன மேலதிகாரி   நிராகத்ததால் சினமுற்றே இந்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக