சனி, 14 மே, 2011

வெளிநாட்டில் வாழும் இலங்கைப் பிரஜைகள் வட பகுதியிலுள்ள தமது உறவினர்களின் மரணச் சடங்கிற்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சிடமிருந்து ஒருநாளில் அனுமதி பெற வேண்டுமாயின் தமது விண்ணப்பத்துடன் மரணமடைந்தவரின் மரணச் சான்றிதழையும் சமர்ப்பிக்கவேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெளிநாட்டில் வாழும்  இலங்கைப்  பிரஜைகள் வட பகுதியிலுள்ள    தமது உறவினர்களின்   மரணச் சடங்கிற்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சிடமிருந்து ஒருநாளில் அனுமதி பெற வேண்டுமாயின் தமது விண்ணப்பத்துடன் மரணமடைந்தவரின் மரணச் சான்றிதழையும் சமர்ப்பிக்கவேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தை சோதனைச் சாவடியூடாக வடக்கிற்குச் செல்லும் வெளிநாட்டுப் பிரஜைகள் அனைவரும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்தது.
இதற்கு முன்னரும் இம்மாதிரியான நடைமுறைகள் வழமையாக இருந்த போதிலும் வெளிநாட்டுப் பிரஜையாக இருப்பினும் அவரது கடவுச்சீட்டில் பிறப்பிடமாக இலங்கைப் பிரதேசமொன்று குறிப்பிடப்பட்டிருந்தால் அவ்வாறானவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியமில்லை என்ற ஏற்பாடு இருந்தது.
எனினும் தற்போது அவ்வாறானவர்களுக்கும் வடபகுதி செல்வதென்றால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம் என்று பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வெளிநாட்டுப் பிரஜைகளும் வடபகுதிக்குச் செல்வதற்குப் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்று அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கைப் பிரஜை ஒருவரையோ அல்லது இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் ஒருவரையே திருமணம் முடித்த வெளிநாட்டுப் பிரஜை மற்றும் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட அது கடவுச்சீட்டிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் வெளிநாட்டுப் பிரஜாவுரிமையைக் கொண்டவர்களும் இந்த அனுமதியைப் பெற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன் அனுமதியைப் பெறுவதற்கு நான்கு தினங்களுக்கு முன்னர் அதாவது 96 மணித்தியாலங்களுக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.  இதேவேளை, வெளிநாட்டில் வாழும்இலங்கைப்  பிரஜைகள் வட பகுதியிலுள்ள தமது உறவினர்களின் மரணச் சடங்கிற்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சிடமிருந்து ஒருநாளில் அனுமதி பெற வேண்டுமாயின் தமது விண்ணப்பத்துடன் மரணமடைந்தவரின் மரணச் சான்றிதழையும் சமர்ப்பிக்கவேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் தொலைநகலில் பதிலைப் பெறுவதற்கான தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்தல் வேண்டும் என்றும் அவ்வாறு தொலைநகலில் பதிலைப் பெற முடியாதவர்கள் நேரடியாகப் பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்திற்குச் சென்று தமக்குரிய பதிலைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக