வியாழன், 12 மே, 2011

யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பிரதேச கடல் நீர் சிவப்பு நிறமாக காட்சியளிப்பதாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பிரதேச கடல் நீர் சிவப்பு நிறமாக காட்சியளிப்பதாக தெரியவந்துள்ளது.

இதனை யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க தலைவர் திரு எஸ். தவரட்ணம் உறுதிப்படுத்தியுள்ளார்.

வடமராட்சி வடக்கு கடற்கரையிலிருந்து 10 கிலோமீற்றர் தூரத்துக்கு இந்த சிவப்பு நிற நீர் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கான காரணத்தை அறிவதற்காக தற்போது அந்தக் கடற்பரப்பில் உள்ள நீர் எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகஅவர் மேலும் தெரிவித்தார்.

ஆய்வின் முடிவில் அதற்கான காரணத்தை கண்டறிந்து விடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக