செவ்வாய், 13 டிசம்பர், 2011

பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்திலும், சாத்தாவோலை சம்புநாதீஸ்வரர் ஆலயத்திலும் திரு

பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்திலும், சாத்தாவோலை (வயல்கரை) சம்புநாதீஸ்வரர் ஆலத்திலும் கடந்த இரவு திருடர்கள் தம் கைவைசையக் காட்டியுள்ளனர். அங்கு பெய்யும் அடைமழையையும், காற்றுப் புயலையும் சாதகமாக்கி திருடர்கள் ஆலய கதவை உடைத்து உட்புகுந்துள்ளனர்.
பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் தெற்கு வாசல் கதவை உடைத்து, உட் புகுந்து அதன்பின் மகாமண்டப தெற்கு வாசல் கதவின் இரும்பாலான குறுக்குச் சட்டத்தை வெட்டி ஆலயத்திற்குள் நுளைந்திருப்பதாக அறிய முடிகின்றது. ஆலய மூலமூர்தியிலும், எழுந்தருளி மூர்த்தியிலும் அணியப் பெற்றிருந்த அம்பிகையின் நகைகள் 3 தாலிகளும், முருகனின் வேலும், அம்பிகையின் வாளும் ,ஒலிபெருக்கி  சாதனங்களும் ,இன்னும்  மேலதிகமாக கழவுபோயுள்ளதாக முதற்கட்ட விசாரைனையில் தெரிய வருகின்றது, அத்துடன் ஆலய மூல மூர்த்தி அரக்கப்பெற்றிருபதனால் பிராயச்சித்த அபிஷேகம் ,நடாத்தபட்டு விட்டதாக  ஊரில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சாத்தாவோலை சம்புநாதீஸ்வரர் ஆலயத்திலும் திருடர் உட் புகுந்துள்ளதாக அறிய முடிகின்றது. விபரம் இதுவரை அறிய முடியவில்லை. இவ் இரு திருட்டு சம்பந்தமாக சங்கானைப் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக