செவ்வாய், 3 ஜனவரி, 2012

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஆண்டு 179 பேர் தற்கொலை


யாழ்.மாவட்டத்தில்  கடந்த ஆண்டு 179 பேர் தற்கொலை செய்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் புள்ளி விவரங்களில் இருந்து தெரியவருகிறது. இது 2010 ஆம் ஆண்டின் தற்கொலை மரணங்களிலும் பார்க்க 21 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் தூக்கில் தொங்கி 56 பேரும், நஞ்சருந்தி 50 பேரும் நீரில் மூழ்கி 43 பேரும் நெருப்பில் எரிந்து 30 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அவலச்சாவு-2011
தூக்கு – 56 நஞ்சு – 50
மூழ்கி – 43 எரிந்து – 30
ஜனவரி மாதம் 19பேரும், பெப்ரவரி மாதம் 19 பேரும் மார்ச் மாதம் 23 பேரும், ஏப்ரல் மாதம் 17 பேரும், மேமாதம் 23 பேரும் ஜூன் மாதம் 15 பேரும் ஜூலை மாதம் 11 பேரும் ஓகஸ்ட் மாதம் 11 பேரும் செப் ரெம்பர் மாதம் 9 பேரும் ஒக்ரோபர் மாதம் 11 பேரும் நவம்பர் மாதம் 9 பேரும் டிசெம்பர் மாதம் 12 பேருமாக மொத்தம் 179 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இது கடந்த 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதிகரித்த மன அழுத்தமே இந்த திடீர் தற்கொலை அதிகரிப்புக்கு காரண மெனவைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி                   19
பெப்ரவரி                19
மார்ச்                        23
ஏப்ரல்                       17
மே                             23
ஜூன்                        15
ஜூலை                    11
ஓகஸ்ட்                   11
செப்ரெம்பர்              9
ஒக்டோபர்               11
நவம்பர்                      9
டிசெம்பர்                 12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக