புதன், 4 ஜனவரி, 2012

மனுவேந்தனின் நேரமில்லை நேரமில்லை ?????????


வளர்ந்துவரும் இவ்வுலகில் யாரைக்கேட்டாலும்  நேரமில்லை என்று கூறுவது நாகரீகமாகிவிட்டது.இதிலும் இரண்டு வகையினர்.
ஒன்று உண்மையிலே நேரமிலாதோர்.இன்னொரு வகையினர் நிறையப் பொழுது இருந்தாலும் முதல் வகையினருக்குப் போட்டியாக 
நேரமில்லை என்று பேசித் தப்பிக் கொள்பவர்.எப்படியோ அனைவரும் நலமுடன் வாழ்க வாழ்கவென பிறக்கப்போகும் புத்தாண்டினை 
முன்னிட்டு  புலம்  பெயர் தேசங்களில் இயங்கும்   எமது ஊர்கள் சார்ந்த  அமைப்பின் நிர்வாகத்தினரையும் அவர்கள் தோளோடு தோள் 
நின்று உழைப்பவர்களையும்,தூண்களாக நின்று தாங்கும் விளம்பரதாரர்களையும்    அங்கத்தவர்களையும்  தீபம் இணையத்தளம் 
வாழ்த்திக்கொள்கிகிறது.
ஆனால் அவசரமான இந்த உலகில் வீடும் வேலையும் என்று மாறி மாறி ஒரு இயந்திரம் மாதிரி வாழ்தல்தான் வாழ்வா?
திருப்திகரமானதா?இப்படியே மனிதன் வாழ்ந்துகொண்டு போனால் எதிர்காலத்தில் நிறைய மனநோயாளரைத்தான் இந்த 
நாட்டில் நிறையக் காண முடியும். நாம் வாழும் இந்த மண் எங்கள் கலை கலாச்சாரத்தில் அக்கறை கொண்டு எங்கள் கலைவிழாக்களை 
கொண்டாடுங்கள் ஒன்று கூடல்களைச் செய்யுங்கள் என்று உச்சாகப் படுத்தவில்லை.குடியேறிவிட்ட ஒவ்வொரு இனத்திலிருந்தும் 
உருவாகப்போகும் எதிர்காலக் சமுதாயம் ஆரோக்கியமுள்ளதாக இருக்கவேண்டும் என்றே அது விரும்புகிறது.
புலம் பெயர் மண்ணில்இந்த அவசரமான வாழ்க்கையின் மத்தியிலும் மேற்படி நிகழ்ச்சிகளை எப்படியோ தம்மால் இயன்ற அளவில் 
தரமானதாக செய்து முடிக்கவென்று பணி புரியும் அன்பர்களும் நேரமில்லாதவர்களே! அவர்களுக்கும் வீடுண்டு, வேலையுண்டு 
பிள்ளைகளுண்டு.இத்தனைக்கும் மத்தியில் இப்பணியினை செய்து நிறைவு செய்வது என்பது சாதனையே!
அவர்களின் அந்நிகழ்வுகளுக்கான கூட்டங்கள், அலைச்சல்கள், கொள்வனவுகள் என்பவற்றிற்கான நேரவிரயம் வாகன விரயம்
எவற்றிற்கும் யாரும் கூலி  கொடுப்பதும்  இல்லை, அவர்கள் எதிர்பார்ப்பதுவும் இல்லை.
   மேலும்,இத்தனை சுமைகளுக்கு மத்தியிலும், பணிபுரியவென்று வருபவர்கள் நிகழ்வுகள் அனைத்தையும்  சரியாகத் திறம்பட செய்து 
முடிப்பதிலே அவர்கள் காண்பது திருப்தியும் சந்தோசமுமேயாகும். அப்படியானவர்கள் ஒருநாளும் தவறுசெய்ய எண்ணமாட்டார்கள்.
ஆனால் எல்லோரும் மனிதர்கள்.எல்லோருக்கும்  வெவ்வேறு விதமான சிந்தனைகள்,கருத்துக்கள்  இருப்பது வழமையே. அவை தவறுமல்ல.
              ஒருசில நிமிடங்களாயினும்  ஒரு தரமான கலை நிகழ்ச்சி மேடை ஏறுகிறது எனில் அந் நிகழ்ச்சிக்குரிய கலைஞர்கள் அல்லது 
அப்பிள்ளைகள்,அவர்களின் பெற்றோர்களும்  அந் நிகழ்ச்சியினை பயிற்றுவித்தவர்களும் தங்கள் வேலைநேரம்,கல்விநேரம்,சொந்த 
அலுவல்கள் அனைத்தையும் தியாகம் செய்தே அந்நிகழ்ச்சி மேடைக்கு வந்து சேர்க்கிறது.எங்களை மகிழ்விக்க முடிந்த அந் நிகழ்ச்சிகளினை
நிச்சயம் நாம் பாராட்டும் போது அவர்களும் மகிழ்கிறார்கள்.எமக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
   ஆனால் எல்லோரையும் ஒரு கருத்தோ அல்லது ஒரு நிகழ்வோ திருப்திப் படுத்திவிடமுடியாது.ஆனால் பெரும்பான்மையோரின் ஒரு 
கருத்தினை தான் விரும்பாவிட்டாலும் அவன்ஏற்றுக் கொண்டுதானாகவேண்டும்.அதுதான் உலக நியதி.
அத்துடன் நாம் அன்றாடம் செய்யும் கடமைகளில் தெரியாமலே எத்தனையோ தவறுகளை செய்துவிடுகிறோம்.பலரும் இணைந்து செய்யும் 
விழாக்கள்,தவறுகள் இல்லாது இடம்பெறவே அனைவரும் உழைக்கின்றனர்.ஆனால் எங்கோ ஒரு மூலையில் எப்படியோ ஒரு தவறு ஏற்பட்டுவிடுகின்றன.அடுத்தமுறை அத்தவறு நடவாது கண்ணுக்குள் நெய்விட்டுப் பார்த்திருந்தால் அது வேறொரு பகுதியில் டந்துவிடுகிறது.
தவறுகள் சுட்டிக் காட்டப்படவேண்டியவை தான்.அதற்காக நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று அழுங்குப்பிடியில் நிற்பதுவும்,
குழப்புவதும் எமது தாழ்ச்சிக்கே  வழிகோலும்.அதனை விடுத்து பெரும்பான்மையான அங்கத்தவர்களின் கருத்துக்களுக்கு ஒத்துழைத்து 
செயல்ப்படுவதாலேயே நாம் அனைத்து வகையிலும் வளர்ந்து செல்லமுடியும்.அப்பழக்கம் எமது தனிப்பட்ட வாழ்க்கையில் கூட வளர்ச்சிக்கு 
வழி
சமைக்கலாம்.
மேலும்,ஊருக்கான அபிவிருத்திப் பணிகளுக்கான நிதிகளைக் கூட இப்படியான நிகழ்வுகள்முலமே புலம் பெயர் நாடுகளில் சகல
 ஊர் அமைப்புகளும் திரட்டுகின்றன.இந் நிகழ்வுகளுக்கு செல்வது இலாபமா,நஷ்டமா என்று சிந்திப்பது எல்லாம் அபத்தமானது.
எனவே தவறுகளை த்தேடியலையாது அவை நடவாது களைந்து  நல்லனவற்றை.ஆரோக்கியமான   வழியில் சிந்தித்து செயல்படுவோம்.
தனித்து எவராலும் வாழ்ந்திடல் முடியாது.வளர்ந்திடலும்  இயலாது.தேடிச் செல்வோம்.கூடி வாழ்வோம்.கூடி வளர்வோம். கூடவே ஊரையும் 
வளர்ப்போம்.
                                               வணக்கம்.................................. theebam.com.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக