வெள்ளி, 27 ஏப்ரல், 2012

பண் கலை பண்பாட்டுக் கழகம் அழைத்துச் செல்லவுள்ள சுற்றுலாக்கள் - 2012 - வீடியோ இணைப்புஇவ் வருடதின் முதல் சுற்றுலாவாக கனடா தினமான  01.07.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று நயாகரா நீர்வீழ்ச்சியையும், அதற்கு அண்மையில் அமைந்துள்ள பூங்காவையும் பார்வையிடுவதற்கு அழைத்துச்  செல்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பெற்றுள்ளன.

பார்வையிட திட்டமிடப்பெற்றுள்ள இடங்கள்
இச் சுற்றுலாவில் கலந்து கொள்ள விரும்பும் அங்கத்தினர்கள் தங்கள் பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்றைய தினம் இந் நிகழ்வுகளைப் பார்வையிட சனக் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதனால். முன்கூட்டியே அனுமதி பெறவேண்டியுள்ளது என்பதனையும் அறியத் தருகின்றோம்.

இச்சுற்றுலா 01.07.2012 ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டு மறுநாள் காலை திரும்பி வர திட்டமிடப்பெற்றுள்ளது. தங்குமிட வசதியுடன் கூடிய போக்குவரத்து வசதிகளை கழகம் ஒழுங்கு செய்ய திட்டமிடப்பெற்றுள்ளது என்பதனையும் அறியத்தருகின்றோம்..

இச் சுற்றுலா பற்றிய விபரங்களைத் அறிந்து கொள்ள

நடேசன் 
மனுவேந்தன்
யோகராணி 

ஆகியோருடன் தொடர்பு கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக