செவ்வாய், 17 ஏப்ரல், 2012

மறுமலர்ச்சி மன்றத்தால் வருடாவருடம் நடாத்தப்படும் க.பொ.த. சா.தர பரீட்சையில் சித்தியெய்திய எமது கிராமத்தின் மாணவர்களைக் கௌரவித்துப் பரிசில் வழங்கும் நிகழ்வானது எதிர்வரும் 21.04.2012 (சனிக்கிழமை) பி.ப. 4.30க்கு இடம்பெறவுள்ளது.

.
மறுமலர்ச்சி மன்றத்தால் வருடாவருடம் நடாத்தப்படும் க.பொ.த. சா.தர பரீட்சையில் சித்தியெய்திய எமது கிராமத்தின் (காலையடி, பனிப்புலம், சாந்தை, கலட்டி, செட்டிகுறிச்சி, குஞ்சன்கலட்டி, செருக்கப்புலம்) மாணவர்களைக் கௌரவித்துப் பரிசில் வழங்கும் நிகழ்வானது எதிர்வரும் 21.04.2012 (சனிக்கிழமை) பி.ப. 4.30க்கு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த. சா.தர பரீட்சையில் சித்தியெய்திய எமது கிராமத்தின் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூபா 2000 பெறுமதியான ஒக்போட் ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதியும், ஏனைய பல பரிசில்களும் வழங்கப்படும். இப்பரிசில்களை எமது கிராமத்தவரான மகாதேவர் சிவநேசன் (கனடா) அவர்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
கற்றவருக்குக் கிடைக்கும் கௌரவம், மற்றவரைக் கற்கத் தூண்டுவதுடன் - பரீட்சையில்
பெற்ற புள்ளி பற்றிப் பெருமிதமும் கொள்ளத் தூண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக