திங்கள், 30 ஏப்ரல், 2012

மறுமலர்ச்சி மன்றத்தில் மீண்டும் இல்ல விளையாட்டுப் போட்டி


மறுமலர்ச்சி மன்றத்தில் மீண்டும் இல்ல விளையாட்டுப் போட்டி
ஞாயிற்றுக்கிழமை
மாலை(29-04-2012) மறுமலர்ச்சி மன்ற கந்தசாமி ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றஒன்று கூடலில் மறுமலர்ச்சி மன்ற விளையாட்டு அரங்கில் முன்பு நடந்தது போன்றுஇல்லம் பிரித்து முன் போன்று சிறப்பாக இல்ல விளையாட்டுப் போட்டியை மீண்டும்ஆரம்பிக்க எமது ஊர் இளைஞர்கள் முடிவு செய்துள்ளனர்இதற்கு மறுமலர்ச்சி மன்றநிர்வாகமும் அனுமதி அளிப்பதாகவும் இணைந்து செயற்படுவதாயும் அந்தச் சந்தர்பத்தில் தெரிவித்து உள்ளார்கள்.வெளிநாட்டில்இருந்து வருகை தரும் எமதுார் மக்களும் இவ் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வதற்கு ஏதுவாக இவ் விளையாட்டுப் போட்டி எதிவரும் ஏழாம் மாதம் முதலாம்திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்தலாம் என்றும் விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் ஒருமாதகாலத்திற்கு முன்னரே ஆரம்பிக்க வேண்டும் என்றும் தீர்மானம்மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்விழாவிற்கானசெலவின் பங்களிப்பை ஊர் பெரியவர் ஒருவர் தனது பங்கை அன்பளித்து ஆரம்பித்துவைக்க பலர் தங்களின் பங்களிப்பை வழங்க முன் வந்துள்ளார்கள்.இவ் ஒன்றுகூடல்நிகழ்வில் மறுமலர்ச்சி மன்ற நிர்வாகம் உற்பட எமது ஊா் அனேகமான இளைஞர்கள்பங்கெடுத்து இருந்தார்கள்இந்த நிகழ்வில் பேசப்பட்ட மற்றைய விடயங்களின்முக்கியத்துவம் காரணமாக ஒளிப்பதிவு செய்யப் பட்ட படங்களை இணையங்களில்வெளியிட முடியாமல் உள்ளதாக நிகழ்வை ஒளிப்பதிவு செய்த சுவிஸில் இருந்து ஊர்சென்ற வேளை இந்த நிகழ்வில் கலந்து கொண்ட திருமுரளி திருநாவுக்கரசு அவர்கள்எமக்கு தெரிவித்தார்.        மேற்படி விடயங்களையும் அவரே எங்களுக்கு தொலைபேசிவாயிலாக அறியத்தந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக