சனி, 14 ஏப்ரல், 2012

ஆறுமுக வித்தியாலய கபொத சாதாரண தர பரீட்சைப்பெறுபேறு - சாதனையா / வேதனையா?ஆறுமுக வித்தியாலய கபொத சாதாரண தர பரீட்சைப்பெறுபேறு - சாதனையா / வேதனையா?

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்
         கீழே தரப்பெற்ற அட்டவணையில், எம்மில் அநேகர் கல்வி கற்ற யா/சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலய மாணவர்களின் பெறுபேறுகளைக் காணலாம். இங்கே தரப்பட்டுள்ள தரவானது, அதிர்ச்சி ஊட்டுவனவாக உள்ளதோடு அல்லாது, ஆறுமுக வித்தியாலய கல்வித்தர அச்சாணியையே ஒருமுறை அசர வைப்பதாய் அமைகிறது.
யா/சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் - 2012(பாட வாரியாக, A, B, C மற்றும் S போன்ற சித்திகளை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கைத் தரவு)பரீட்சைக்கு தோற்றியவர்களில் 33 வீதமானோர் மேற்படிப்புக்கு தகுதி பெறுகின்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகளோடு, தொடரும் கபொத உயர்தர படிப்பில் மேலும் பல வெற்றிகளோடு வளர chulipurambest webs சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். சமய பாடத்தினை நடாத்தும் ஆசிரியரின் திறன் மற்றும் மாணவர்களின் சமய தேர்ச்சி மிகவும் வெளிப்படையாக தெரிகிறது. சமய பாடத்தில் ஏழு மாணவர்கள் அதி உச்ச சித்தி (A) பெற்றுள்ளதும் தமிழ் மற்றும் தொழில் பாடத்தில் தலா ஒரு அதி உச்ச சித்தி (A) பெறப்பட்டுள்ளதும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவை.
இந்த தரவுகள் சொல்லும் மறுபக்க செய்தி தான் என்ன?
இந்த பரீட்சைக்கு தோற்றியவர்களில் 33% (சதவீதமானோர்) மாத்திரமே மேற் படிப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பரீட்சைக்கு தோற்றியவர்களில், மூவரிற்கு ஒருவரே மேற் படிப்பிற்கு தகுதி பெறுகின்றார். இந்த தரவை மேலே குறிப்பிட்ட நாடு தழுவிய தரவோடு ஒப்பிட்டு பாருங்கள். நாடு தழுவிய ரீதியில், 61 விழுக்காடு மாணவர்கள் க.பொ.த உயர்தரக் கல்வி பயிலும் தகமையை பெற்றிருந்தும் எமது பாடசாலையில் 33 விழுக்காடு மாணவர்களே தேர்வடைந்திருப்பது, மாணவர்க்கு வழங்கப்பெறும் கல்வித்தரத்தினை மீளாய்வு செய்யக்கோர வழி கோலுகிறது. இலங்கையிலேயே மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்க கூடிய ஒரு தரத்தினை இந்த புள்ளி விபரங்கள் காட்டி நிற்கிறது.இவற்றோடு மேலும் வேதனை தரும் விடயமாக, இன்றைய உலகில் அதி முக்கியமான பாடங்களாகக் கொள்ள கூடிய கணிதம் விஞ்ஞானம் போன்ற பாடங்களில் எவருமே உயர் சித்தியான 'A', மற்றும் அதற்கு அடுத்த தகைமையான 'B' யோ பெறவில்லை என்பதோடு, இவற்றிற்கு அடுத்த தர தேர்ச்சியான 'C' இலும் இருவரை தவிர அறுவர் வெறும் சாதாரண சித்தியே பெற்றுள்ளனர் என்பது, எம் எதிர் கால சந்ததியின் படிப்பின் தராதரம் பற்றி, பலவித கேள்விகளை எழுப்புகிறது. யுத்தத்தினை கூடக் காரணம் சொல்ல முடியா இந்த நேரத்தில், இந்த நிலைமைக்கு என்ன தான் காரணம்? இது மாணவர்களின் குறைபாடா அல்லது அவர்களை பதப்படுத்தி பரீட்சைக்கு தகமை பெறத் தயார்படுத்தும் ஆசிரியர்களின் குறைபாடா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக