புதன், 9 மே, 2012

சாரதியின்றி சுயமாக இயங்கும் காருக்கு அமெரிக்காவின் நெவடா மாநில போக்குவரத்துத் துறை அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளது. மேற்படி டொயோட்டா பிரையுஸ் ரக காரை சாரதியின்றி இயங்கக்கூடியதாக பிரபல இணையத்தள நிறுவனமான கூகிள் நிறுவனம் வடிவமைத்திருந்தது. இக்காருக்கு நெவடா மாநில அரசாங்கம் அனுமதிப்பத்திரம் வழங்கியதன் மூலம் அம்மாநில வீதிகளில் இக்கார் விரைவில் பயணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கணினியின் மூலம் இயங்கும் இக்காரின் மீது வீடியோ கமரா, ராடர் மற்றும் லேசர் உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக