செவ்வாய், 5 ஜூன், 2012

உதவியமைக்காக கனடாவில் இரு ஆலயங்களுக்கு அபராதம்.
2004 ஆம்  ஆண்டு  ஏற்பட்ட  சுனாமி அனர்த்தத்தை தொடர்ந்து   புலிகள் இயக்கத்தின் முகவர் நிறுவனம் என சந்தேகிக்கப்பட்ட தமிழ் அகதிகள் நிறுவனத்துக்கு பணம் வழங்கியதற்காக டொரண்டோவில்  உள்ள  இரண்டு இந்து ஆயலங்களுக்கு கனடா இறைவரி முகவரம் அபராதம் விதித்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளைகளான றிச்மண்ட் ஹில் இந்து ஆலயம், மிஸஸாகோ  இந்து மிஷன் ஆலயம் ஆகியவற்றுக்கு முறையே 140,000 டொலர், 300,000 டொலர் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
நன்கொடை பெற தகுதியில்லாத நிறுவனத்துக்கு நிதி வழங்கிய குற்றத்துக்காக இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டன என அறிவிக்கப்பட்டுள்ளது.  அறக்கட்டளை பணிப்பகமும் இக் குற்றச்சாட்டை அங்கீரித்து ஆலயங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
சுனாமியால் விளைந்த அவலம், இனிமேல் இவ்வாறு நடக்கமாட்டதென ஆலயங்கள் அளித்த உறுதியுரை ஆகியவற்றை கருத்தில்கொண்டு ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட அறக்கட்டளை என்ற அங்கீகாரத்தை  இரத்து செய்யாமல்  விடுவதாக கனடா இறைவரி முகவரகம் கூறியுள்ளது.
தமது செயலை நியாயப்படுத்தும் வகையில் றிச்மன்ட் ஹில் ஆலய செயலாளர் மனிக் அம்பிகாவதி ‘இலங்கை அரசாங்கத்தை உலக தமிழர்கள் நம்பவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 70 சதவீதமானமை தமிழ் பிரதேசங்களாக இருந்தபோதும் 80 சதவீதமான உதவிகள் தென்மேல் பகுதிக்கே சென்றன. தமிழர் அகதி நிறுவனம் (டிஆர்ஓ) ஐக்கிய நாடுகளாலும் அமெரிக்காவாலும் கனடாவாலும் அப்போது அங்கீகரிக்கப்பட்டிருந்தது’ என அவர் கூறினார்.
இந்த அபராதம்  அநீதியானது எனவும் இது தொடர்பில் மேன்முறையீடு செய்ய போவதாகவும் மிஸஸாகோ ஆலயத்தை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டவுரைஞர் ஹரி நேசதுரை கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக