ஞாயிறு, 10 ஜூன், 2012

பெண்களுக்கான எச்சரிக்கை :தயவு செய்து தாங்கள் பேஸ்புக்கை
கையாளும் போது கவனமாக கையாளவும். பல விஷமிகள் நல்லவர்கள் போன்ற முகமுடியனிந்து பரவிக்கிடக்கிறார்கள். அதனால்

1. பெண்கள் எக்காரணத்தை கொண்டும் தங்களது தொலைபேசி எண்களை பொதுவான இடங்களில் தெரியப்படுத்த வேண்டாம்.

2. தங்களது புகைப்படம், முகவரி, சொந்த விவரம், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்களை எக்காரணத்தை கொண்டும் வெளியிட வேண்டாம்.

3.பெண்களை தங்கைகளாக பாவித்து உறவு கொண்டாடும் பல பேஸ்புக் விஷமிகள் உண்மையில் அப்படி ஒரு எண்ணத்தில் தங்களிடம் பழகுகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது.

4.பேஸ்புக் நட்பு என்றுமே பேஸ்புக் நட்பாக இருக்கும் வரையில் எந்த தொந்தரவும் இல்லை. அது உண்மையான நட்பு என்று நினைத்து நெருங்கும் போதுதான் பிரச்சனை ஆரம்பமாகிறது.

5.நீங்கள் குறிப்பிட்ட நண்பரை விட்டு விலகும் போது அவருக்கு உங்களைப் பற்றிய எந்த விவரமும் தெரியாதவாரு பார்த்துக்கொள்ளவும்.

சில கசப்பான உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்படுகிறது. எனவே இதனை வெறும் பதிவாக கருதாமல் இதில் உள்ள உண்மைகளை புரிந்து பாதுகாப்பான சமூகத்தில் இணையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக