வெள்ளி, 22 ஜூன், 2012

கனடாவில் வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும்: மக்களுக்கு எச்சரிக்கை
கனடாவில் முன்பு இருந்ததை விட அதிகளவு வெயில் தாக்கும் என்று சுற்றுச்சூழல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனடாவைப் பொறுத்தவரை ஜுலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரின் முற்பகுதியில் முன்பிருந்த வெயில் காலத்தை விடவும் அதிக வெயிலை எதிர்பார்க்கலாம் என்று தட்பவெப்பவியல் மூத்த அறிஞர் டேவ் பிலிப்ஸ் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், நாட்டின் எந்தப் பகுதியிலும் இதற்கு முன்பிருந்ததை விட வெயில் குறைந்திருக்கும் என்று கூற இயலாது. சில இடங்களில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
ஒண்டோரியோவிலும், கியூபெக்கிலும் வெயில் 40 டிகிரியை விட குறைவாக இருக்கும். கடந்த 65 ஆண்டுகளில் ஒன்பதாவது சாதனை ஆண்டாக, இந்த ஆண்டின் வெயில் இருக்கும். சராசரியை விட 1½ டிகிரி அதிகமான வெப்பம் பரவியிருக்கும்.
ஒரு வாரத்துக்கு அல்லது ஒரு இடத்துக்கு வெயிலின் அளவு ஒரே மாதிரி இருக்கும் என்று கருதி எவரும் சுற்றுலா கிளம்ப வேண்டாம். திறந்தவெளி விருந்துக்குத் திட்டமிட வேண்டாம். காலநிலை மாற்றம் இடத்துக்கு இடம் வாரத்துக்கு வாரம் மாறுபடும்.
இதுதவிர சில இடங்களில் காட்டுத் தீயும், சூறாவளிக் காற்றும் இருக்கும். சுற்றுலா செல்பவர்கள் குறிப்பிட்ட நாட்களில் அந்த இடத்தில் உள்ள தட்பவெப்பத்தை அறிந்து பயணம் மேற்கொள்வதே சிறந்தது என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக