புதன், 27 ஜூன், 2012

யாழ் சனத்தொகையில் வீழ்ச்சி!
30 வருடங்களின் பின் இலங்கையில் மேற்கொள்ளப் பட்ட குடிசன மதிப்பீட்டின்படி இலங்கையின் தற்போதைய சனத்தொகை 20,227,597 என குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் யுத்தத்தின் முடிவில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டில் யாழ். குடாநாட்டில் 20 சதவீதமான சனத்தொகை வீழ்ச்சி காணப்படுதாக அறியப்பட்டுள்ளது.
யாழ். குடாநாட்டின் சனத்தொகை 1981ஆம் ஆண்டு 734,000ஆக காணப்பட்ட நிலையில் 2012ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அது 583,000ஆக குறைந்துள்ளதென குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
10 வருடங்களில் இலங்கையின் சனத்தொகை 0.7 வீதத்தில் குறைவடைந்துள்ளதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்தில் அதிகூடிய 1.33 வீத சனத்தொகை அதிகரிப்பும் நுவரெலியா மாவட்டத்தில் ஆகக்குறைந்த 0.5 வீத சனத்தொகை அதிகரிப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளதென குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக