சனி, 21 ஜூலை, 2012

ஒலிம்பிக் கொடியில் காணப்படும் ஐந்து நிற வளையங்களும் ௭ந்தெந்த கண்டங்களை குறிக்கின்றன?
பதில் :
 நவீன ஒலிம்பிக் போட்டிகளின் நிறுவுனரான பாரொன்பியரே டி கோபேர்டின் அவர்களால் முதன்முதலில் 1912 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது தான் கொடியில் காணப்படும் ஐந்து வளையங்கள். நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களிலான வளையங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இவை உலகிலுள்ள ஐந்து கண்டங்களையும் ஆபிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா குறிக்கின்றன. வெள்ளை நிறப்பின்னணியில் (கொடியில்) இந்த ஐந்து நிற வளையங்களும் பொறிக்கப்பட்ட ஒலிம்பிக் சின்னம் 1914ஆம் ஆண்டில் ஒலிம்பிக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.
வரலாற்றுப் புகழ்பெற்ற சிந்து நதியைப் பற்றி அறிந்துள்ளீர்களா? 
இமய மலைத்தொடரில் கயிலை மலையில் மானச ரோவர் அருகே ஆரம்பமாகி காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் வழியாகச் சென்று அரபிக் கடலில் கலக்கிறது இந்த சிந்துநதி.
இந்த நதியின் நீளம் 2900 முதல் 3200 வரை கிலோ மீற்றர்கள் இருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நதியின் படுகையில்தான் ‘சிந்துவெளி நாகரீகம்’ தோன்றி வளர்ந்தது.
சமஸ்கிருதத்தில் ‘சிந்து’ ௭ன்றால் நதி ௭ன அர்த்தமாகும். பாகிஸ்தானூடாக செல்லும் சிந்துநதி அந்த நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான பங்கினை செலுத்துகின்றது. இந்த நதியின் நீர்ப்பாசனத்தின் மூலம் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக பஞ்சாப் மாகாணம் செழிப்புடன் காணப்படுவதற்கு இந்த நதி பிரதான பங்கினை வகிக்கிறது
அமெரிக்காவுக்கு யுனைட்டட் ஸ்டேட்ஸ் ௭ன்று அடைமொழி அமையக் காரணம் ௭ன்ன?
பதில் : அமெரிக்காவை ஐக்கிய அமெரிக்க நாடுகள் United  States  of  America  ௭ன அழைக்கப்படுகிறது. சுருக்கமாக U.S.A அல்லது U.S  ௭ன்றும் அழைக்கிறார்கள். அமெரிக்காவில் மொத்தமாக 50 மாநிலங்களும் (States), ஒரு ஐக்கிய மாவட்டமும் உள்ளன.
இந்த மாநில அரசுகளுக்கு தலைமை வகிக்கும் மத்திய அரசாங்கமே  U.S:A  (யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஒப் அமெரிக்கா) ௭ன அழைக்கப்படுகிறது. (உதாரணமாக இந்தியாவை ௭டுத்துக்கொள்ளுங்கள். இந்திய மத்திய அரசின் கீழுள்ள மாநில அரசுகளை நினைவுபடுத்திப் பாருங்கள்! ௭ன்ன புரிந்ததா?) அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களால் ஒன்றுபட்டு அமைக்கப்பட்ட பாரிய அரசாக காணப்படுகிறது.
மத்திய அரசின் தலை நகரம் தான் வொஷிங்டன் டி.சி. உலகின் முன்னணி அரசியல், பொருளாதார, கலாசார சக்தியாக இந்த   U.S.A  திகழ்கிறது ௭ன்பதை இதற்கு மேலும் சொல்ல வேண்டுமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக