வியாழன், 12 ஜூலை, 2012

கனடியத் தமிழர் பாராளுமன்ற வேட்பாளராக மீண்டும் தெரிவுகனடியத் தமிழர்சான் தயாபரன் மீண்டும் மார்க்கம் - யூனியன்வில் தொகுதியின் ஒன்ராரியோ பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட புரோகிரசிவ் கன்சவேட்டிவ் கட்சி சார்பில் தெரிவாகியுள்ளார்.
கடந்த ஒன்றாரியோ மாகாணதேர்தலில் முதன் முறையாகப் போட்டியிட்டு தமிழ் மக்களினதும் மற்றும் பல்லாயிரக்கணக்கான பல்லின மக்களதும் ஆதரவைப் பெற்ற சான் தாயாபரன் கூடுதலான வாக்குகளைப் பெற்று இரண்டாவது நிலையில் இருந்தார் என்பது இங்கு குறிப்பிட்த்தக்கது.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிறுபான்மை அரசே அமைந்த நிலையில் எதிர்கட்சியான கன்சவேட்டிவ் கட்சி எப்போது தேர்தல் நடந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.
அதற்கு இதுவரை நியமிக்கப்பட்டுள்ள சில வேட்பாளர்களில் சான் தயாபரனும் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சான் தயாபரனுக்கு கட்சித் தலைவர் ரிம் கியூடாக் தனது பிரத்தியேக வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் சிறந்த தொண்டனாக நின்று பணிபுரியும் சான் தயாபரன் முன்னணி சிறுவர்த்தக உரிமையாளரும் நல்லதோர் குடுப்பத் தலைவனாகவும் இருப்பதனால் எவ்வாறு தனியார் துறைகளில் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதன் மூலம் ஒன்றாரியோவின் சுபீட்சமான எதிர்காலத்தை கட்டியெழுப்பலாம் என்பதில் பூரண விளக்கம் கொண்டவர் என்று ரிம்கியூடாக் மேலும் தெரிவித்தார்.
கனயடித் தமிழர்கள் கனடிய அரசியல் நீரோட்டத்தில் தாக்கம் மிகுந்தவர்களாக சமீப காலமாக மாறிவரும் நிலையில் தமிழர்கனை தம் சார்பில் நிறுத்த பிரதான மூன்று கட்சிகளிடையேயும் சமீபகாலமாக என்றுமில்லாத ஆர்வம் அதிகரித்துள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.
தமிழர்கள் அதிகம் வாழும் ஒன்ரோரியோ மாநிலத்தில் அதுவும் அதிகம் வாழும் மார்க்கம் - யூனியன்வில் தொகுதியில் தமிழர் ஒருவர் போட்டியிடுவது தமிழர்களிடையே மீண்டும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் தற்போதிருந்தே நாம் கடினமான வேலை செய்யவேண்டும் எனவும், அதற்கான முழுமையான ஒத்துழைப்பை கனடியத் தமிழரிடம் தாம் முழுமையாக வேண்டி நிற்பதாகவும், சான் தயாபரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக