வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

சமூக நீதிக்கான வெகுஜன செயலணி – அறிமுகம்“சிறுவர்களின் ஆளுமை விருத்தி, இளைஞர்களுக்கான தொழிற் பயிற்சியும், வேலைவாய்ப்பும், முதியோர் பராமரிப்பு என்பவற்றினூடான கிராம அபிவிருத்திக்கான மக்கள் செயலணி”

ஒட்டுமொத்தமான எமது கிராமத்தின் (காலையடி, பனிப்புலம், சாந்தை, கலட்டி, குஞ்சன்கலட்டி, செட்டிகுறிச்சி, செருக்கப்புலம்,  காலையடி தெற்கு, சுழிபுரம் வடக்கு ஆகிய ஊர்கள் உள்ளடங்கலாக) அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட, அனைவரதும் இணைந்த செயற்பாட்டை வேண்டிநிற்கும் மக்கள் செயலணியாக “சமூக நீதிக்கான வெகுஜன செயலணி” எமது கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் அலுவலகம் காலையடியில், இடும்பன் கோயிலுக்கு அருகாமையில், சில்லாலை வீதியில் அமைந்துள்ளது.

செயலணியின் முதலாவது செயற்பாடாக முதியோர் பராமரிப்பும், சிறுவர்களுக்கு (மாணவர்களுக்கும்) போசாக்கான உணவு வழங்கலும், பகல் ஓய்வு நிலையமும், இரவுப் படிப்பகமும், உடற்பயிற்சிக் கூடமும் ஆரம்பிக்கப்படுகின்றது.

எமது கிராமத்தில் வசிக்கும் அதிகமான வயது முதிர்ந்த பெற்றோர்கள் தனிமையில் வாழ்கின்றனர். இதனால் அவர்கள் பல உடல் உள ரீதியான பிரச்சினைகளுக்கு உள்ளாவதுடன், அதற்கான மருத்துவ, பராமரிப்பு வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சிரமப்படுகின்றனர். 

எனவே, செயலணியானது அவர்களுக்குத் தேவையான உதவிகளை இனங்கண்டு நிறைவேற்றுவதைத் தனது பிரதான வேலைத்திட்டமாக முன்னெடுக்கவுள்ளது. அதாவது, அவர்களுக்குத் தேவையான, போசாக்கு நிறைந்த, மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்ற உணவு வகைகளைத் தயாரித்து விநியோகிப்பதுடன், தமது வீடுகளை மிகவும் நேசிக்கின்ற, பாதுகாக்கின்ற அம் முதியவர்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உதவிகளையும் பெறுவதற்கு ஏற்ற வகையில், பயிற்சியளிக்கப்பட்ட, அவர்களுக்கு அண்மையில் வசிக்கும், அவர்களின் உறவினர்களான எமது ஊரின் இளைஞர், யுவதிகளின் மூலம் இப்பணிகளை முன்னெடுக்கவுள்ளது. அவர்களுக்கான போக்குவரத்து, மருத்துவ, உளவளத்துணை, சுற்றுலாக்கள், பகல் ஓய்வு நிலையம் என்பனவற்றையும் செயலணி ஏற்பாடு செய்யும்.

அத்துடன், காலையில் சிறந்த ஆகாரம் இன்மையினால், எமது ஊரின் சிறார்கள் பலரால் பாடசாலையில் சரியாக இயங்க முடிவதில்லை. இது அவர்களுக்கு பாடசாலைக் கல்வியில் வெறுப்பை ஏற்படுத்தி இடைவிலகச் செய்வதுடன், அவர்கள் குற்றவாளிகளாக மாறவும் காலாகின்றது. எனவே சிறுவர்களுக்கு போசாக்கான உணவினையும், இரவுப் படிப்பக வசதியினையும் செயலணி வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வேலைத்திட்டங்களில் எமது கிராமத்தின் இளைஞர், யுவதிகளுக்கு பயிற்சியையும் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுப்பது மாத்திரமன்றி, எதிர்காலத்தில் இன்னும் பல்வேறுபட்ட துறைகளில் பயிற்சியையும் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் "உணவும் போசனையும்" தொடர்பான பயிற்சிகள் சுகநலக் கல்வியாளர் (இன்று சேவையில் உள்ள அநேகமான தமிழ் தாதி உத்தியோகத்தர்கள் இவரிடம் பயிற்சி பெற்றவர்களே.) உளவளத் துணையாளர் கா.வைத்தீஸ்வரன் அவர்களினால் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9 மணி - 12 மணி வரை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது செயலணியானது ஊரின் அனைத்துப் பொது அமைப்புக்களுடனும் கூட்டிணைந்து செயற்படுவதுடன், இச்சேவைகள் யாவற்றையும் இலவசமாக, எமது ஊரவரின், புலம் பெயர் உறவுகளின் ஒத்துளைப்புடனும் மேற்கொள்ளுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு – தனூட் (தொ.பே.இல. - (0094) 071 8473926, மின்னஞ்சல்saba.thanujan@gmail.com)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக