புதன், 26 செப்டம்பர், 2012


கனடா -  பண்கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் "வாணி விழா-2012" எதிர்வரும் 20.10.2012 சனிக்கிழமை ஸ்காபறோ பெரிய சிவன் ஆலய விழா மண்டபத்தில் மாலை 5:00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும் என்பதனை
கனடா வாழ் எம்மூர் மக்கள் அனைவருக்கும் அறியத்தருவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

இவ்விழாவில் பல கலை நிகழ்ச்சிகளும், பேச்சுப் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற சிறார்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும், "கலைவாணியின் சிறப்பு" சொற்பொழிவுகளும், இராப்போசனமும் இடம்பெறும்

இவ் விழாவிற்கு தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை தந்து விழாவை சிறப்பிக்குமாறு எம்மூர் அன்பு உள்ளங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி அன்போடு அழைக்கின்றோம்

இவ் விழாவில் தங்கள் நிகழ்ச்சிகளை மேடையேற்ற விரும்பும் அன்பர்கள், திரு. மனுவேந்தன் அவர்களுடன் 
(416-569 5121)தொடர்பு கொண்டு தங்கள் நிகழ்ச்சிகளை முங்கூட்டியே பதிவு செய்யுமாறு வேண்டுகின்றோம்
பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

பெரிய சிவன் ஆலய விழா மண்டப முகவரி
1148 - Bellamy Road
Scarborough, ONTARIO
Telephone
416-907-7434 / 416-769-7747
வெள்ளி விழா காணும் - பண் கலை பண்பாட்டுகழகம் - கனடா - 25.12.2012
1987 ம் ஆண்டு மார்கழிமாதம் 25ம் திகதி நத்தார் தினத்தன்று கனடாவில் வாழ்ந்து கொண்டிருந்த எம்மூர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி எமது கலை, கலாச்சாரம், பண்பாடு, மொழி, சமயம், சமூக ஒற்றுமை என்பனவற்றை எதிர்கால சந்ததியினரிடையே வளர்த்தெடுக்கும் நோக்குடன் கனடாவில் உருவாக்கப் பெற்றதே பண் கலை பண்பாட்டு கழகமாகும்.
இக் கழகம் எதிர்வரும் நத்தார் தினத்தன்று தனது 25வது ஆண்டை பூர்த்தி செய்கின்றது. அதன் 25 வருட வரலாற்றில் பல சமூக சேவைகளை முன்னெடுத்து தாயகத்திலும், கனடாவிலும் நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத் தக்கது. இவ் வருட குளிகால ஒன்று கூடல் நிகழ்வினை கழகத்தின் "வெள்ளி விழா"வாக கொண்டாட தீர்மானிக்கப் பெற்றுள்து என்பதனை அறியத் தருவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.

இவ் விழாவின் போது வெளியிடுவதற்கு தீர்மானிக்கப் பெற்றுள்ள "வெள்ளி விழா மலரில்" எம்மூர் மக்களின் ஆக்கங்கள் பிரசுரிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பெற்றுள்ளன. இவ் மலரில் பிரசுரிப்பதற்காக வெளிநாடுகளிலும், தாய் நாட்டிலும் வாழும் எம்மூர் மக்களிடமும், சங்கங்கள், மன்றங்கள், ஒன்றியங்களிடமும் ஆக்கங்களை தந்து இம் மலரைச் சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

தங்கள் ஆக்கங்களை panculture.canada@yahoo.ca ன்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

குறிப்பு:
1. ஆக்கங்கள் கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும், வாழ்த்துப்பாக்களாகவும் அமையலாம்
2. ஆக்கங்கள் ஒரு பக்கத்திற்கு மேல் இருப்பதை தவித்துக் கொள்ளல் வேண்டும்
3 ஆக்கங்கள் ஒரு இனத்தையோ, ஒரு குலத்தையோ அல்லது ஒரு தனி மனிதனையோ நோகடிக்கச் செய்வனவாக அமைதல் தவிர்க்கப்படல் வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக