திங்கள், 3 செப்டம்பர், 2012


பணிப்புலத்தில்  பிறந்து, காலையடியிலும், இறுதிக் காலம் கனடா - ஸ்காபறோ நகரில் வாழ்ந்து வந்தவரும்; இலங்கை போக்குவரத்து சபை டிப்போ சுபிறீம்டென்ரன்(suprintendant)  ஆக சேவையாற்றியவருமான;
பெரியார் வைத்திலிங்கம் சிவஞானம் அவர்கள் 01.09.2012 சனிக்கிழமை கனடா டொரண்டோ நகரில் உள்ள தனது இல்லத்தில் சிவபதம் எய்தினார்.

அன்னார், அமரர்களான வைத்திலிங்கம் அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்;
அமரர்களான இராமலிங்கம்-செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்;
தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்;

மார்க்கண்டு(அமரர்), வரதராஜா(அமரர்), நாகரத்தினம்(கொழும்பு), இராமச்சந்திரன்(அமரர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சிவரஞ்சனி (சுவிட்சர்லாந்து), சிவமோகன்(கனடா), சிவச்சந்திரன்(கனடா), சிவகுமாரி(டென்மார்க்), சிவச்செல்வன் (நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்;

சிவசுப்ரமணியம்(அமரர்) , இந்திரகுமார்(அமரர்), தவமணி(அம்மன்), சத்தியபாமா(சிவமலர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்;

நிருத்திகா, நீருஜா, கோபிகா, நிதர்சன், ராவிஷன், சாம்பவி, விசிஷன், நிவீஷா, ரிஷீபன் ஆகியோரின் பாசமிகு பேரனாரும்;
புவனேஸ்வரி(அமரர்), சிவக்கொழுந்து, நடராசா(அமரர்), சியாமளாதேவி, இராசதங்கம், பாலசிங்கம்(அமரர்), துரைசிங்கம்(அமரர்), பரமேஸ்வரி, நாகேஸ்வரி, சாவித்திரிதேவி ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரின் பூதவுடல், 04.09.2012 செவ்வாய்க்கிழமை மாலை 5 .00 முதல் 9 .00 வரை "ஓக்டன் ( Ogden ) funeral home"( 4164 Sheppard Ave East, Toronto - Midland and Sheppard சந்திப்பு )  இல் பார்வைக்கு வைக்கப்பட்டு;
மறுநாள் புதன் காலை அதே "ஓக்டன் ( Ogden ) funeral home" ல் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று, பூதவுடல் தகனம் செய்யப்பெறும்.
பூதவுடல் தகனம் செய்யும்  இடம் பின்னர் அறியத் தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
தகவல்: குடும்பத்தினர்
துயர் பகிர: 001-416-269-2560

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக