திங்கள், 22 அக்டோபர், 2012

பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி - மேலும் பல நவீன வசதிகளுடன் புனரமைப்பு - கனடா வாழ் பழைய மாணவர்கள்இன்றைய நவீன உலகில் கல்வி அறிவு இல்லாதவன் வாழ்க்கை குருடனின் வாழ்க்கைக்கு ஒப்பானதாக எல்லாவற்றிகும் வேறு ஒருவரின் உதவியை நாடவேண்டி உள்ளது. இல்வாழ்கை சிறக்க கல்வி அறிவு மிக முக்கியமென்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. . எனவே எமது சிறார்களை கல்வி அறிவு மிக்கவர்களாக வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களாகிய எம்மையே சாருகின்றது.
ஆரம்பக் கல்வி முறையாக அமையாவிட்டால் உயர் கல்வி தொடர முடியாது போய்விடுகின்றது. அதுபோல் கல்லூரி கல்வியும் சரியாக அமையாவிட்டால் பல்கலைக்கழக படிப்பு தொடரமுடியாது போய் விடுகின்றது. அதற்கான காரணங்கள் பல இருந்தாலும் அவற்றுள் மிக முக்கியமானது பாடசாலைகளில் காணப்படும் வளங்களும், வசதிகளுமேயாகும்.
ஒரு புலோக்காணியில் இருக்கும் ஒரு நற்பழ மரக்கன்றானது மழைநீரை நம்பி வாழ்கின்றது. அத்துடன் அதன் நிலவளமும் பண்படுத்துப்படாது இருப்பதனால் செழித்து வளர முடியாது இருப்பதை நாம் காண்கின்றோம். அந்த பழமரக் கன்றானது வளம்மிக்க நிலத்தில் நிற்குமாகில் அது செழிப்பாக வளர்ந்து அதி கூடிய பலனைத் தருமென்பது திண்ணம்.
எங்கள் ஊரும் அதன் அயல் கிராமங்களும் கல்வி வளர்ச்சியைப் பொறுத்தளவில் புலோக் காணிக்கு ஒப்பானவைகளாக வளங்கள் குன்றிக் காணப்பெறுகின்றன. இங்கு செழித்து வளர்ந்து நல்ல பயன் தரக்கூடிய சிறார்கள் முளைத்து இருந்தாலும் அவர்கள் அங்கு கிடைக்கும் அரசாங்க உதவிகளில் (மழைநீரை நம்பி வாழும் பயிகளைப் போல்) செழிப்பின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நல்ல வசதிகளும், கல்வி கற்பதற்கான வளங்களும் பட்டினத்து பாடசாலைகளைபோல் கிடைக்குமானால் அவர்களும் ஊருக்கும், நாட்டிற்கும் பயந்தரக்கூடிய கல்விமான்களாக விளங்குவார்கள் என்பதில் ஐயம் இல்லை.
கடந்த காலங்களில் எம்மூர் இளையோர் ஊர்ப் பாடசாலைகளில் தமது ஆரம்ப கல்வியை கற்றபின் அயல் கிராமங்களில் இருந்த கல்லூரிகளில் தமது உயர் கல்வியை தொடர்ந்தார்கள். அவற்றுள் பிரபல்யமாக திகழ்ந்தவை பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி, பண்டத்தரிப்பு மகளீர் உயர்தர கல்லூரி, சுளிபுரம் விக்ரோறிக் கல்லூரி, வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி என்பனவாகும். இவற்றுள் மிக அண்மையில் இருப்பதும், எம்மூரார் அதிகமானனோர் கல்வி கற்றதும் பண்டத்தரிப்பில் அமைந்துள்ள இந்துக் கல்லூரியிலும், மளீர் உயர்தர கல்லூரியிலுமே என்பது குறிப்பிடத் தக்கது.

போர்காலச் சூழ்நிலையில் எம்மூர் மக்களிள் அதிகமானோர் கல்வி பயின்ற பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி தரைமட்டமாக்கப்பட்டது யாவரும் அறிந்த உண்மை. இப் பாடசாலை தற்போது பல தொண்டு நிறுவனங்க்களினதும், ஊர் பிரமுகர்களினதும், அரசாங்கத்தினதும் உதவிகளுடன் புனர் நிர்மாணம் செய்யப் பெற்று வரும் இவ்வேளையில், அதன் விஞ்ஞான ஆய்வு கூடத்தினை அமைக்கும் பணியில் கனடாவில் இயங்கும் வடலியடைப்பு ஒன்றியத்தைச் சேர்ந்த இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் செயல்பெற்று வருகின்றனர். 
விஞ்ஞான கல்வியைப் பொறுத்தளவில் செய்கை முறையுடனான கல்விமுறை மாணவர்களுக்கு இலகு வழியில் விளங்கிக் கொள்வதற்கு உதவுவதோடு, மனதிலும் திடமாக பதிவாகின்றது. எனவே விஞ்ஞான ஆய்வு கூடத்தின் தேவை மிக முக்கியமாகின்றது. அதுவும் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் கணினிகளுடன் சம்பந்தப்படுத்தி கற்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். இவாறான நவீன உபகரணங்ககளுடன் கூடிய ஆய்வு கூடத்தினை அமைப்பதற்கு அதிக பணம் தேவைப்படுவதால், அப் பாடசாலையில் கல்வி பயின்ற எம்மூர் பழைய மாணவர்களின் உதவியையும் நாடி வந்துள்ளார்கள். அவர்களுடன் நாமும் இணைந்து எம்மாலான உதவிகளைச் செய்து அப்பாடசாலையை வசதிகள் நிறைந்த ஒரு பாடசாலையாக அமைப்பதன் மூலம் எம்மூர் இளையோர் அதிகதூரம் (பட்டினம்) சென்று கல்வி கற்கும் சிரமத்தினை தவித்துக் கொள்வதுடன் எம்மை மனிதனாக வாழ்வதற்கான கல்வி அறிவைப் புகட்டிய அப் பாடசாலைக்கும் நன்றிக் கடன் செலுத்துவதாகவும் அமையும்.
இவ் அரிய பணிக்கு நன்கொடைகள் வழங்கி இப் பாடசாலையை நவீன வசதிகளும், வளங்களும் மிக்க அறிவுக் களஞ்சியமாக அமைப்பதற்கு உதவி செய்ய விரும்புவோர் திரு. மங்கலேஸ்வரன் குமரேசு அவர்களை 416-520-2753 இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
கடந்த 20.10.2012 அன்று நடைபெற்ற கனடா - பண்கலை பண்பாட்டுக் கழக வாணிவிழாவின் போது அங்கு சமூகம் தந்து பண உதவி கோரியபோது எம்மூர் பழைய மாணவர்களும், மக்களும் தாமாகவே முன்வந்து பண உதவி செய்தார்கள். அவர்களின் விபரம் கீழே பதியப்பெற்றுள்ளன.
க. கனகரத்தினம்         - $100
க. வைகுந்தன்+சங்கர்  - $100
பே. விஜயநாதன்        - $100
செ. மனுவேந்தன்        - $100
சி. நடேசன்               - $100
ம. கிருபைநாதன்        - $100
ம. சிவநேசன்            - $50
ம. சிவா                   - $50
க. சிறீதரன்               - $50
கா. சண்முகம்           - $50
த. தவராசா              - $50
க. முகுந்தன்             - $50
ஐ. வினாயகமூர்த்தி    - $50
க. சிவனேசன்            - $50
சு. சிவகுமார்             - $50
பா. கங்காதரன்            - $50
சி. பாலசிங்கம்            - $50
கு. ஈஸ்வரன்            - $50
திருமதி.விமலநாயகி. இ    - $50

January 25, 2012
மேலே உள்ள படம்: யாழ் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பாடசாலைகளில் மாணவர்கள் கற்றல் உபகரணங்கள் இன்மையால் பாடசாலைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர் என பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி அதிபர் இ.புஸ்பராசா தெரிவித்தார்.  மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் உதவியுடன் வறிய மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பண்டத்தரிப்பு இந்து கல்லூரியில் நடைபெற்ற போது அதிபர் புஸ்பராசா இதனைத்தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக