திங்கள், 15 அக்டோபர், 2012

ஒலியை விட வேகமாக விண்வெளியிலிருந்து குதித்து பீலிக்ஸ் சாதனைஒஸ்ரியா  நாட்டைச் சேர்ந்த  ஆகாச சாகசக்காரரான  பீலிக்ஸ் போம்கார்ட்னர் பூமியிலிருந்து 24 மைல்கள் (128,100 அடி)  மேலே இருந்து குதித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஈலியம் நிரப்பப்பட்ட பலூன் மூலம் பூமியிலிருந்து சுமார் 24 மைல்கள் தொலைவுக்கு சென்ற பீலிக்ஸ் அதனுடன் பொருத்தப்பட்ட கெப்சூலில் இருந்து கீழே குதித்தார்.
பீலிக்ஸ் கெப்சூலிருந்து குதித்து பின்னர் பரசூட்டின் உதவியுடன் பூமியில் பத்திரமாகத் தரையிறங்கினார்.
இவர் தரையிறங்கிய பிரதேசம் அமெரிக்காவின் நியூமெக்ஸிகோ மாநிலமாகும்.

விண்வெளியிலிருந்து அவர் ஒலியினை விட அதிகமான வேகத்தில் கீழே குதித்ததுடன் ஒரு கட்டத்தில் வேகம் மணித்தியாலத்துக்கு 833 மீற்றரை எட்டியது.  குறித்த வேகமானது சுப்பர்சொனிக் ஜெட் மற்றும் விண்வெளி ஓடங்களால் மட்டுமே எட்டப்படக் கூடியன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காகப் பல நாட்களாக பயிற்சியை மேற்கொண்டிருந்த பீலிக்ஸ் ஒருவாறு இச்சாதனையைப் புரிந்துள்ளார்.

மிகவும் அபாயகரமான இம்முயற்சியில் சிறிய கோளாறு ஏற்பட்டிருப்பினும் இரத்தம் கொதிப்படைந்திருப்பதுடன் அவரது மூளையும் வெடித்திருக்கும்.
இம் முயற்சியை அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னரே மேற்கொள்ளத் திட்டமிருந்த போதிலும் சீரற்ற காலநிலை காரணமாக அம்முயற்சி இருதடவைகள் பிற்போடப்பட்டது.

இந்நிலையில் நேற்று அவர் தனது முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தார். அவரின் இச்சாதனையைப் பலர் இணையத்தில் நேரடியாகக் கண்டு மகிழ்ந்தனர். மேலும் அவர் தரையிறங்கியவுடன் அவருக்குப் பலத்த வரவேற்பும் அளிக்கப்பட்டது.
இந்த பின்னணியில் நாசா உதவியுடன் பாம்கார்ட்னர் நடத்திய சாகச முயற்சிக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் ஜொய் கிட்டிங்கர் முக்கிய உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்புக் கருவிகள்
மிதக்கும் பலூனில் இணைக்கப்பட்டிருக்கும் கலனில் அமர்ந்தபடி வான்வெளி மண்டலத்திற்கு சென்ற ஃபெலிக்ஸ, அங்கே முப்பத்தி ஆறரை கிலோமீட்டர் உயரம் சென்றதும் தான் இருக்கும் கலத்தின் கதவு திறந்து கீழே குதித்தார். அவர் குதிக்கத் துவங்கும் வான்வெளியில் காற்றின் அடர்த்தி பூமியின் கடல்மட்டத்தில் இருப்பதை ஒப்பிடும்போது வெறும் இரண்டு சதவீதம்தான்.
அதன் விளைவாக அங்கே காற்றில் ஆக்சிஜனின் அளவு மிகக்குறைவாகவே இருந்தது. அதனால் இவர் குதித்தபோது அவரது உடலில் கட்டப்பட்டிருக்கும் ஆக்சிஜன் கலத்திலிருந்துதான் சுவாசித்தார்.
அதைவிட முக்கியமாக, அவர் குதித்த உயரத்தில் குளிர் மைனஸ் முப்பது செல்ஷியஸ் ஆகும்.
இத்தனையையும் எதிர்கொண்டு அவர் கீழே குதிக்கும்போது அவர் மணிக்கு சுமார் 1110 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்தர்ர். இந்த வேகத்தில் அவர் வந்தபோது அவரது உடலில் பல்வேறு விதமான ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும். அவற்றை தாங்கி அவரது உடலை பாதுகாக்கும் வகையில் அவரது உடற்கவசம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
பலூனில் ஏறி ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் மேல் நோக்கி பயணித்து 39 கிலோமீட்டர் உயரத்தை அடைந்த ஃபெலிக்ஸ், அங்கிருந்து இருபது நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் தரையை வந்தடைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக