ஞாயிறு, 7 அக்டோபர், 2012

சாந்தை சிற்றம்பல வித்தியாசாலையும்,எம்மவரும்?
சாந்தை ஊரை பற்றிய ஒரு தேடல் கல்வியை பற்றி ஒரு நோக்கு அங்கு இருக்கும் பெரியோருக்கும் மற்றும் புலம்பெயந்து இருக்கும் எம்மவருக்கும் செவிப்புலனுக்கு நான் கூறவந்த விடயம் சகல வளங்கள் நிறைந்த எமது மண்ணில் கல்வி என்னும் கடலைகடக்க எம்மூரில் பாடசாலை இருந்தும் அயலூரில் சென்று கல்வி கற்க வேண்டிய நிபந்தனைக்கு கொண்டு வந்தவர்கள் யார்?பெற்றோர்களா சமுதாயமா?இதன் மறு பக்கம் என்ன? முதலில் ஆரம்ப கல்விக்கே பல மைலுக்கு அப்பால் சென்று கற்க வேண்டிய நிலை ஏன் வந்தது? சாந்தை சனசமுக நிலையத்தில் கணணி பாடம் மட்டும் நடத்தினால் மட்டும் போதுமா? ஆரம்பக்கல்வி தேவை இல்லையா?சாந்தை சிற்றம்பலம் வித்தியாலயம் தற்போது இதன் நிலை எம்மவர்கள் எவரும் இதன் வாசலை நாடியதில்லை இதன் காரணம் நானறியேன் இது உங்கள் கவனத்திற்கு!!

அன்றைய காலங்களில் எம்மவர்களின் ஆரம்பக்கல்வியை வளர்க்க சாந்தை சன சமூக நிலையம்;சாந்தை சிற்றம்பல வித்தியாசாலை ஆகியன சிறப்பான பங்குகள் வகித்தன:இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது மிகவும் அவசியமானதாக உள்ளது ;இக்கல்வியை வழங்கும் ஒரு கூடமே சாந்தை சிற்றம்பல வித்தியாசாலை ;இங்கு அடிப்படை வசதிகள் இருந்தும் மாணவர் பற்றாக்குறை தொடர்ந்து இருந்து வருகிறது  ;ஆயினும் சிறந்த ஆசிரியர்களின் கல்வி புகட்டளினால் மாணவர்கள் ஆரம்பக்கல்வியில் சித்தியடைந்து மேல் படிப்புக்காக வேறு பாடசாலைக்கு செல்கின்றனர் : 

எம்மவர்களாகிய அனைவரும் சேர்ந்து ஒத்துளைப்புக்கொடுத்து நம் பிள்ளைகளையும் அனுப்பி எம்மூர் பாடசாலையை வளம்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.எம்மவர்கள் இப்பாடசாலையில் கல்வி கற்க மிகவும் தயங்குகிறார்கள்.காரணம் என்ன?உங்களின் பதிலுக்காக காத்திருக்கும் சாந்தையூர் தாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக