வியாழன், 8 நவம்பர், 2012

ஸ்காபரோ நகரில் இடம்பெற்ற தீவிபத்தில் இலங்கைப் தமிழ்ப் பெண் பரிதாப மரணம்நேற்றைய தினம் ரொறன்ரோ ஸ்காபரோ நகரில் இடம்பெற்ற தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் காயமடைந்திருந்தனர். அவர்களில் ஒருவரான 56 வயதுடைய திருமதி சந்திரலீலா சிவபாதம் இன்று வைத்தியசாலையில் மரணமடைந்தார்.
சுமார் மூன்று வருடங்களிற்கு முன் இந்த வீட்டிற்கு குடிபுகுந்த மேற்படி இளம்குடும்பத்தின் பெற்றோரான மேற்படி பெண்ணும் கணவரும் தமது மகள், மருமகள் மற்றும் தமது இரண்டு புத்திரர்களுடன் மேற்படி வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர்.
இவரின் மகளிற்கு 22 மாதமேயான ஒரு பிள்ளையுண்டு அத்தோடு மகளும் அடுத்த குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு கர்ப்பணித் தாயாவர்.
வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகணமே முதலில் தீப்பற்றியெரிந்து அதனிலிருந்து தீ வீட்டிற்குப் பரவியிருக்கலாம் என்றே தீயணைப்புப் படையினரும் பொலிசாரும் கருதுகின்றனர். நடுநிசி ஒரு மணியளிவில் தீ பரவி வீட்டின் தீ மற்றும் புகை எச்சரிக்கைக் கருவியின் சத்தத்தையடுத்து திருமதி சந்திரலீலா சிவபாதம் மற்றயைவர்களையும் எழுப்பி தீயிலிருந்து தப்பிப் போக முயன்றுள்ளார்.
எனினும் இவர்களில் ஐவர் இத் தீவிபத்தினால் பாதிக்கப்பட்டனர். திருமதி சந்திரலீலாவினது கணவர் இன்னமும் ஆபத்தான நிலையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதைவிட மூவர் அதிகளவு புகையை சுவாசித்தது உள்ளிட்ட காரணங்களிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக