புதன், 14 நவம்பர், 2012

இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் பலி
பலஸ்தீனின் காஸா பள்ளத்தாக்கு மீது இன்று புதன்கிழமை இஸ்ரேல் நடத்திய வான் வழித்தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தின் இராணுவ பிரிவின் தலைவரான அஹ்மத் ஜபாரி உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் பயணித்துக் கொண்டிருந்த காரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட விமானத் தாக்குதலிலேயே ஜபாரி உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளின் பின்னணியில் ஜபாரி இருந்தாகவும் அதன் காரணமாக தாம் அவரை இன்று இலக்கு வைத்து தாக்கியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பலஸ்தீன மக்களின் ஹீரோக்களில் ஒருவராகக் கருதப்படும் அஹ்மத் ஜபாரி, ஹமாஸ் இயக்கத்தின் மிகச் சிறந்த ஆளுமைகளில் குறிப்பிடத்தக்க ஒருவராவார்.  கடந்த ஒரு வார காலமாக காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
85 views

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக