புதன், 14 நவம்பர், 2012

ஹம் மீனாட்சி அம்மன் கோவில் பூசாரி தாக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிப்பு !


ஹம் மீனாட்சி அம்மன் கோவில் பூசாரி தாக்கப்பட்டு நகைகள் கொ

ஹம் மீனாட்சி அம்மன் கோவில் பூசாரி தாக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிப்பு !
ஜேர்மனியில் மிகவும் பிரபல்யமான கோவிலாகத் திகழ்வது ஹம் மீனாட்சி அம்மன் கோவிலாகும். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இக் கோயிலை உடைத்து, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் ஒரு குழுவினர்.
அத்தோடு அருகில் இருந்த பூசாரியையும் வீடு புகுந்து தாக்கியுள்ளார்கள் இக் கள்வர்கள். இச் சம்பவத்தால் தாம் அதிர்ந்துபோயுள்ளதாக ஹம் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
அவர் நேரடியாக இக் கோவிலுக்கு விஜயம் செய்து, பூசாரியிடம் நடந்ததைக் கேட்டறிந்துள்ளார்
தொமஸ் கஸ்டன்கர் மேலும் தெரிவிக்கையில், பூசாரி அவர்கள் தாக்கப்பட்ட விதம் தொடர்பாக தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அம்மனின் பல பெறுமதி மிக்க நகைகள் இதன்போது கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளது என மேலும் அறியப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக