வியாழன், 31 ஜனவரி, 2013

சிரியாவில் தொடரும் மோதல்: 79 சடலங்கள் ஆற்றில் கண்டுபிடிப்பு
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2 வருடங்களாக போராட்டம் இடம்பெற்று வருகின்றது. அதில் ஈடுபட்ட சுமார் 60 ஆயிரம் பேர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர்.
போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படும் புரட்சி படைக்கு அமெரிக்கா இராணுவம் உதவி செய்து வருகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்று வருகின்றது.
எல்லைப் புறத்தில் உள்ள முக்கிய நகரங்கள் புரட்சி படை வசம் உள்ளன. எனவே அவற்றை மீட்க இராணுவம் போராடி வருகிறது. இந்த நிலையில் அலெப்போ நகரில் உள்ள கியூவிக் ஆற்றில் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப் பட்டவர்கள் பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது அங்கிருந்து 79 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் பெரும் பாலானவர்கள் இளைஞர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களின் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தன. எனவே புரட்சியாளர்களால் கடத்தி செல்லப்பட்ட அரசு ஆதரவாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதாக இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் இதை மறுத்துள்ள புரட்சி படை இராணுவம் தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக