செவ்வாய், 1 ஜனவரி, 2013

சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலையத்தில் (01/01/2013) இன்று மாலை 17.00 மணியளவில் பொதுக்கூட்டமும் எம்மூர் சிறுவர்களின் நடனமும் இடம்பெற்றது அதனைதொடர்ந்து நிலையத்தில் கல்வி கற்று வரும் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி அவர்களது கல்விவளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கபட்டது. அத்துடன் வறுமைப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் வருங்கால கல்வி வளர்ச்சிக்காக ஒரு மாணவருக்கு தலா 5000 ரூபாய் வீதம் மக்களை வங்கியில் இசுனு உதான சேமிப்பு கணக்கில் வைப்பில் இட்டு அவ் மாணவர்களிடம் வைப்பு புத்தகம் கையளிக்கப்பட்டுள்ளது.இதைத்தான் உண்மையான பொது தொண்டு என்பது ,இதை பார்த்து மற்றைய கழகங்களும் செயல்பட்டால் நமது ஊரின் கல்வி உயர்வு அடையும் ,,சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலையத்தின் நிர்வாகத்தினருக்கு நன்றியினையும் வாழ்த்துக்களையும், கலட்டி. கொம் நேயர்கள் சார்பாக தெரிவித்து கொள்ளுகின்றது ,,இந்த நற்பணி தொடரட்டும் ,,,,,,,,,,,,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக