வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

நோர்வே பண் தமிழ் கலை பண்பாட்டுக் கழகத்தின் நிதி அனுசரணையில் யா பண்ணாகம் வடக்கு அ.மி.த.க பாடசாலையில் (காலையடிப் பள்ளிக்கூடம்) சிறுவர் நூலகம் அமைப்பதற்கான உபகரணங்களும் நூல்களும் வழங்கும் நிகழ்வு

நோர்வே பண் தமிழ் கலை பண்பாட்டுக் கழகத்தின் நிதி அனுசரணையில் யா பண்ணாகம் வடக்கு அ.மி.த.க பாடசாலையில் (காலையடிப் பள்ளிக்கூடம்) சிறுவர் நூலகம் அமைப்பதற்கான உபகரணங்களும் நூல்களும் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிறு (03.02.2013) பி.ப 3 மணியளவில் திரு ந. சிவசுப்றமணியம் (அதிபர், யா வட்டு கார்த்திகேசு வித்தியாலயம்) அவர்களின் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு சு. சுந்தரசிவம் (பிரதிக் கல்விப் பணிப்பாளர், தென்மராட்சி வலயம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு ஆ. நற்குணேஸ்வரன் (தலைவர், வர்த்தக மற்றும் மொழித் துறை, யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரி ) அவர்களும் கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்வின் வரவேற்புரையை திரு கோ.சுதாகரன் அவர்களும், ஆசியுரையை சட்டத்தரணி திரு சோ. தேவராஜா அவர்களும், ஏற்புரையை பாடசாலை அதிபர் திரு செ. புண்ணியமூர்த்தி அவர்களும், நன்றியுரையை திரு ஜெ. நிவர்சன் அவர்களும் ஆற்றவுள்ளனர்.

இந்நிகழ்வின் விடே அம்சங்களாக சிறுவர் சிறுமியரின் கலை நிகழ்வுகளும், தேசிய கலை இலக்கியப் பேரவையின் வட பிராந்தியக் கலைக்குழுவினர் வழங்கும் சுப்பற்றை கொல்லை, ஈனம் இனியுமில்லை ஆகிய நகைச்சுவை நாடகங்களும் இடம்பெறவுள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக