சனி, 5 அக்டோபர், 2013

அறிவித்தல் ,, பண்கலை பண்பாட்டுக்கழகம்-கனடா வின் நிர்வாகசபை முடிவுகளின்படி வாணிவிழா வில் அனைத்து எம்மூர் உறவுகளை சந்திக்கும் முகமாக வாணிவிழா அனுமதியினை கழகம் இலவசமாக்கியுள்ளது.அத்துடன் சீட்டில் பங்குபற்றும் அங்கத்தவர்கள் அதிஷ்டலாப சீட்டுழுப்பு மூலம் நீங்களும் அதிஷ்டசாலியாக பெறுமதியான பரிசில்களும் காத்திருக்கின்றன.அனைவரும் அன்புடன் வரவேற்கப்படுகின்றனர். -பண்கலை பண்பாட்டுக்கழகம்-கனடா

 - பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா - 
"வாணி விழா" - 2013 அழைப்பிதழ்- 


கனடா -  பண்கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் "வாணி விழா-2013"  13.10.2012 ஞாயிற்றுக்கிழமை ஸ்காபறோ "பெரிய சிவன் ஆலய விழா மண்டபத்தில்" மாலை 5:00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும் என்பதனை கனடா வாழ் எம்மூர் மக்கள் அனைவருக்கும் அறியத்தருவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். 

இவ்விழாவில் பல கலை நிகழ்ச்சிகளும்,  விளையாட்டுப்  போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற சிறார்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும்,  இராப்போசனமும் இடம்பெறும்

இவ் விழாவிற்கு தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை தந்து விழாவை சிறப்பிக்குமாறு எம்மூர் அன்பு உள்ளங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி அன்போடு அழைக்கின்றோம்

இவ் விழாவில் தங்கள் நிகழ்ச்சிகளை மேடையேற்ற விரும்பும் அன்பர்கள், திரு. மனுவேந்தன் அவர்களுடன் (416-569 5121) தொடர்பு கொண்டு தங்கள் நிகழ்ச்சிகளை முங்கூட்டியே பதிவு செய்யுமாறு வேண்டுகின்றோம்

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

பெரிய சிவன் ஆலய விழா மண்டப முகவரி
1148 - Bellamy Road
Scarborough, ONTARIO 
Telephone

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக