சனி, 5 அக்டோபர், 2013

மறுமலர்ச்சி மன்றத்தின் மாபெரும் அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகள் ஆரம்பம்எமது கிராமத்தின் அபிவிருத்தியில் பெரும் பங்களிப்பாற்றி வருகின்ற மறுமலர்ச்சி மன்றத்தின்
வளர்ச்சிப் பாதையில் பெரும் மைல்க்கல்லாக அமைகின்றதான, மாபெரும் அபிவிருத்தித் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளான நவீன வசதிகளுடன் கூடிய பாலர் பாடசாலை, உள்ளக அரங்கு (கேட்போர் கூடம் - Auditorium) என்பவற்றின் கட்டுமானப் பணிகள் இம்மாதத்துடன் நிறைவுபெற உள்ளன.

கடந்த 28.09.2013 சனிக்கிழமை அன்று கட்டட ஒப்பந்தகாரருக்கும் மன்ற நிர்வாகிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டதுடன், இரண்டாவது கட்ட கட்டுமானப் பணிகளான திறந்த வெளி அரங்கு, சிறுவர் விளையாட்டுத் திடல், ஆலயம், தண்ணீர் தாங்கியும் களஞ்சியமும் ஆகியன தொடர்பாகவும் கட்டட ஒப்பந்தகாரருடன் கலந்துரையாடப்பட்டது. 

இவற்றில் திறந்த வெளி அரங்கு, சிறுவர் விளையாட்டுத் திடல் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், திறந்த வெளி அரங்கு பூர்த்தியாகும் நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய கட்டுமானங்களிற்க்குத் தேவையான நிதி தொடர்பான மதிப்பீடுகள் கட்ட ஒப்பந்தகாரரால் இச் சந்திப்பின்போது வழங்கப்பட்டன.

அவற்றின்படி ஆலயக் கட்டுமானத்திற்கான மொத்த செலவாக ரூபா 3 162 700/= உம், தண்ணீர்த் தாங்கி, கழஞ்சியத்திற்கான மொத்த செலவாக ரூ 1 278 050/= உம் மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆலயக் கட்டுமானப் பணிகளைத் தை மாதமளவில் நிறைவு செய்ய எண்ணியிருப்பதுடன், எதிர்வரும் 2014ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில் மறுமலர்ச்சி மன்றத்தின் 42ஆவது ஆண்டு விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நன்றி.

ச. தனுஜன், செயலாளர், மறுமலர்ச்சி மன்றம் - காலையடி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக