புதன், 1 ஜனவரி, 2014

அறிவித்தல்


பண் கலை பண்பாட்டுக் கழகம்-கனடா
25-12 2013 அன்று நடைபெற்று முடிந்த கழகத்தின் குளிர்கால ஒன்று கூடலில் அன்றைய நிகழ்வினை மேலும் சிறப்பித்து கலைமேடையினை சிறப்பித்துக்கொண்டிருந்த ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கிக் கௌரவித்த வீடு விற்பனை முகவர் கிரிஸ் சிவபாதம் அவர்களுக்கும் ,ஆங்கிலப் போட்டியில் பங்குபற்றிய ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கிக் கௌரவித்த வீடு விற்பனை முகவர்சிவா சிவநேசன் அவர்களுக்கும்,நிகழ்வினைச் சிறப்பித்த கலைஞர்களுக்கும்,சமயலறையில் நின்று கடுமையாக உழைத்த தொண்டர்களுக்கும்,பண்ஒளி  ஆண்டுமலருக்காக விளம்பரம் தந்து பங்களித்த   விளம்பரதாரர்களுக்கும்,விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த உறவுகளுக்கும் கழகம் பாராட்டுக்களையும்,நன்றியினையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறது.
மேலும் புதிய ஆண்டில் புதுமைகள் படைக்க உங்கள் ஆரோக்கியமான ஆலோசனைகளையும் எதிர்பார்க்கும் வேளையில் அனைவர்க்கும் கழகம் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
-பண் கலை பண்பாட்டுக் கழகம்-கனடா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக