ஞாயிறு, 26 ஜனவரி, 2014

மறுமலர்ச்சி மன்றத்தின் கல்விக் குழு


எமது கிராமத்தின் அபிவிருத்திச் செயற்பாட்டின் மைல் கல்லாக அமைகின்ற மறுமலர்ச்சி மன்றத்தின் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றுவருகின்ற நிலையில், அப் பௌதீக வளங்கள் எமது கிராமத்தின் (பனிப்புலம், செருக்கப்புலம், கலையடி, காலையடி தெற்கு, கலட்டி, குஞ்சன் கலட்டி, சாந்தை, செட்டிகுறிச்சி ஆகிய கிராமங்கள் உள்ளடங்கலாக) எதிர்கால அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்படவேண்டும் என்ற நோக்கில், எதிர்கால சந்ததியின் கல்வி அபிவிருத்திக்கான திட்டங்களைத் தயாரித்து நடைமுறைப்படுத்துகின்ற, அதற்கான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குவதற்கானதொரு அமைப்பாக மறுமலர்ச்சி மன்றத்தினால் எமது கிராமத்தின் கல்வியாளர்களை உள்ளடக்கியதான கல்விக் குழு ஒன்று கடந்த 5 ஆம் திகதி மறுமலர்ச்சி மன்றத்தில் இடம்பெற்ற விசேட பொதுக்கூட்டத்தின்போது உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் ஆலோசகராக திரு சு.சுந்தரசிவம் (பிரதிக் கல்விப் பணிப்பாளர்) அவர்களும், தலைவராக திரு N .சிவசுப்றமணியம் (அதிபர்) அவர்களும் குழு உறுப்பினர்களாக திரு சு. திருக்கேதீஸ்வரன் (அதிபர்) அவர்களும் திருமதி யா.இந்துமதி M.Ed (ஆசிரியர்), திரு கோ.சுதாகரன் B.Sc , திருமதி நி. நிரூபா B.A ஆகியோரும் செயற்படவுள்ளனர்.

மறுமலர்ச்சி மன்றத்தினால் நடாத்தப்பட்டுவருகின்ற பாலர் கல்வி, மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான விசேட கல்வி, க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தயார்ப்படுத்துவதற்கான விசேட தொடர் கருத்தரங்குகள் மற்றும் மாலை நேர வகுப்புக்கள் அனைத்தும் இக்கல்விக் குழுவினாலேயே முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுமலர்ச்சி மன்றத்தின் கல்விச் செயற்பாடுகளுக்கான ஆலோசனைகளும், ஆதரவும் தர விரும்புபவர்கள் இவர்களுடனோ மறுமலர்ச்சி மன்ற நிர்வாகத்துடனோ தொடர்புகொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக