சனி, 18 ஜனவரி, 2014

சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலைய அறிவித்தல்.

மேற்படி சனசமுக நிலையத்தில் கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் முதல் பத்திரிக்கை பிரசுரிப்பதற்கு தேவையான பணம் இல்லாத காரணத்தினால் பத்திரிகை பிரசுரிப்பது நிறுத்தப்பட்டது . அத்துடன் நிலைய நிர்வாக சபையினர் செயற்படாத காரணத்தினால் இளைஞர்களின் முயற்ச்சியில் கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் 13ம் திகதி போதுக்கூட்டம் கூடப்பட்டு சனசமுக நிலையத்திர்க்கான புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது. (நிர்வாக சபை தெரிவு பொதுக்கூட்ட அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது) ஊற் இளைஞர்களின் பங்களிப்புடன் தொடர்ந்து இரண்டு தினசரி பத்திரிகைகள் பிரசுரிக்கப்பட்டு வந்தன. தற்பொழுது நிலையத்தில் கையிருப்பு நிதி எதுவும் இல்லை. தொடர்ந்து நிலையத்தை திறம்பட இயக்குவதற்கு புலம் பெயர் எம் ஊர் உறவுகளிடம் இருந்து நிலைய நிர்வாகசபையினர் சிறு உதவியினை கேரி நிற்கின்றனர். (1)தினசரி இரண்டு பத்திரிகைகள் மாதம் ஒன்றுக்கு பிரசுரிப்பதற்கு 1300 ரூபாய். ஒரு பத்திரிகை 20 ரூபாய் வீதம். (2)மின்சாரக்கட்டணம் மாதம் ஒன்றுக்கு 600 ரூபாய். ஆலைய வீதியில் உள்ள மின்கம்பத்தில் இரண்டு மின்விளக்குகளும். நிலையத்தில் ஒரு மின்விளக்கும் தினசரி இரவில் ஒளிர்கின்றன. (3)சிறுவர்களுக்கான கணணி வகுப்புக்கள் நடத்துவதற்கு கல்வி கற்கும் மாணவர்களிடம் சிறு தொகை பெற்றாலும் ஆசிரியருக்கு சம்பளம் கொடுப்பது மின்சாரக்கட்டணம் ஆகிய தேவைகள் நிமித்தம் மாதம் ஒன்றுக்கு 8000 ரூபாய் தேவைப்படுகின்றது. (4)எமது கிராமத்தில் தற்பொழுது திருடர்கள் பயம் அதிகரித்துள்ளதினால் நிலையத்தில் இருக்கும் கணனிகள் ஏனைய பொருட்க்களினையும் பாதுகாக்கும் பொருட்டு நிலைய கதவுகளுக்கு பலம் பொருந்திய பூட்டுக்கள் போடவேண்டிய தேவையுள்ளது. அவ்வாறான பூட்டு ஒன்றின் விலை 3500 ரூபாய். மேலே குறிப்பிட்டுள்ள அணைத்தும் நிலையத்தின் தற்கால அத்தியா அவசிய தேவைகளாகும். இத் தேவைகளினை நிவர்த்தி செய்யும் பொருட்டு புலம் பெயர் உறவுகளின் உதவியை நாடுவோம் என கடந்த மாதம் நிலையத்தில் இடம்பெற்ற நிர்வாகசபை அங்கத்துவர்கள் கூட்டத்தில் முடிவு எடுத்தோம். மேற்குறிப்பிட்ட நிலையத்தின் அத்தியாவசிய தேவைகளினை தனி நபராகவோ அல்லது உங்களால் இயன்ற பங்களிப்பினையோ வழங்கி நிறைவேற்றும் வண்ணம் தயவுடன் வேண்டி நிற்கின்றனர் சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலைய நிர்வாக சபையினர்.
பழைய நிர்வாக சபை பொருள்ளாளரினால் வழங்கப்பட்ட வரவு செலவு கணக்கறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு.
தலைவர் சிவானந்தம்  0094779348011.
சதா.004915216111247.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக