வெள்ளி, 24 ஜனவரி, 2014

சசிதரன் – ஆனந்தி இணைப்பின் பின்னணியில் காதல் ரசம் நிறைந்த ஒரு காதல்கதையும் இருந்தது.


யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை மற்றும் சுழிபுரம்  பிரதேசங்களை   சேர்ந்த பெற்றோருக்கு 10 செப்டம்பர் 1971ல் ஆனந்தி  மகளாகப் பிறந்தார். ஆறு பிள்ளைகளைக் கொண்ட  ஒரு குடும்பத்தின்   ஐந்தாவது பிள்ளை அவர். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் (ஈபிஆர்எல்எப்) அங்கத்தவராக இருந்த ஆனந்தியின் மூத்த சகோதரியான வசந்தி, 1989ல் குரும்பசிட்டி சந்தியில் வைத்து   எல்.ரீ.ரீ.ஈ யினரால் கொலை செய்யப்பட்டார்.
சிலவருடங்கள் கழித்து அவரது இளைய  சகோதரர் எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்தார். சில காலங்களுக்குப் பிறகு அவர் காணாமல் போய்விட்டார், மற்றும் அவர் மோதலில் கொல்லப் பட்டிருக்கலாம் என கருதப்பட்டது.
விக்டோரியா
ஆனந்தி சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் ஒரு மாணவியாக இருந்தபொழுதே எழிலனை முதன்முதலாகக் கண்டார், எழிலன் அப்போது எல்.ரீ.ரீ.ஈயில் இருந்தார்.அவர் யாழ்ப்பாணம் அச்சுவேலியை சேர்ந்தவர். எழிலன் அப்போது எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவில் தீவிரமாக இயங்கி வந்தார். அவர் விக்டோரியா கல்லூரியில் மாணவர்களுக்கு ஒரு சொற்பொழிவு ஆற்றுவதற்காக அங்கு வந்திருந்தார். அப்போது எல்.ரீ.ரீ.ஈ யின் கட்;டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் அந்தந்த பாடசாலைகளில் வைத்து சொற்பொழிவு நடத்துவது ஒரு வழக்கமாக இருந்தது.
எழிலனின் பளிச் என்ற தோற்றம்,கள்ளங் கபடமற்ற ஆனந்தியின் கண்களுக்கு அவரைப் பற்றிய ஒரு சாதகமான அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. மற்றும் அவரது பேச்சில் சாதி, சீதனம் மற்றும் பெண்ணுரிமை போன்ற விடயங்கள் பற்றி எழிலன் வெளிப்படுத்திய முற்போக்கான கருத்துக்கள் ஆனந்திக்கு அவர்மீது பாரிய தாக்கத்தை ஏற்டுத்தியது.
ஆனந்தியை பொறுத்தமட்டில் அது முதற் பார்வையிலேயே காதல் உண்டானதைப் போன்ற ஒரு விடயம். ஆனால் எழிலனுக்கு அது அப்படி இருக்கவில்லை. ஆனந்தி தனது உணர்வுகளை இடையாட்கள் மூலமாக அவருக்கு தெரியப் படுத்தியதும் அவர் அதை உடனடியாகவே நிராகரித்து விட்டார். எனினும் ஆனந்தி அதில் பிடிவாதமாக இருந்ததார், மற்றும் இறுதியாக அவர் எழிலனை நேருக்கு நேர் சந்தித்து தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.
திரும்பவும் அதை நிராகரித்த எழிலன் தான் தமிழீழம் என்கிற இலட்சியத்தை திருமணம் செய்து கொண்டிருப்பதாகக் கூறி,அவரது படிப்பில் கவனம் செலுத்துமாறு ஆனந்திக்குஅறிவுரை சொல்லியனுப்பினார். எதையும் இலகுவில் விட்டுக் கொடுக்கும் குணம் கொண்டவரல்ல ஆனந்தி.  அவர் எழிலனின் இதயத்தை வென்றெடுக்கும்  முயற்சியை தொடர்ந்து கொண்டேயிருந்தார்.
இதற்கிடையில் ஆனந்தி தனது இரண்டாந்தரக் கல்வியை முடித்துவிட்டு கணக்கியல் படிப்பை தொடர ஆரம்பித்திருந்தார். அவர்  அரசாங்க வேலை ஒன்று கிடைத்த பின்னர் தனது படிப்பை கைவிட்டார். 1992 ஜூன் 10ல் யாழ்ப்hணக் கச்சேரியில் ஒரு எழுதுவினைஞராக தனது பணியை ஆனந்தி ஆரம்பித்தார். 1993 முதல்1996 வரை அவர் சங்கானையில் உள்ள வலிகாமம் உதவி அசாங்க அதிபர் பணிமனையில் கடமையாற்றினார்.
இந்த வருடங்களிலும் எழிலன் மீதுள்ள அவரது விருப்ப உணர்வுகள் மறைந்து விடவில்லை. தனது உள்ளத்தில் தோன்றியிருக்கும் ஆவலை வென்றெடுக்க தீர்மானித்த அவர் அதற்காக விடாமுயற்சியை மேற்கொண்டிருந்தார். இறுதியில் எழிலன் மனம் இழகினார்.
ஆனால் விரைவிலேயே அங்கு மற்றொரு பிரச்சினை உருவாகியது. 1995 – 96ல் நடத்திய சூரியக்கதிர் நடவடிக்கை மூலம் ஸ்ரீலங்கா இராணுவம்  யாழ்ப்பாணத்தின் கட்டுப்பாட்டை திரும்பவும் பெற்றுக் கொண்டது. எழிலன் உட்பட எல்.ரீ.ரீ.ஈயினர் முழுவதும் வடபகுதி பெரு நிலப்பரப்பான வன்னிக்கு குடிபெயர்ந்தனர்.
அதை தொடர்ந்து ஆனந்தியும் அங்கு இடம் பெயர்ந்தார். முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் 1997 முதல் 2003 வரை அவர் ஒரு எழுதுவினைஞராக கடமையாற்றினார். அதன்பின் 2003 தொடக்கம் அவர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நிருவாக உதவியாளராக பணியாற்ற ஆரம்பித்தார். கடந்த வருடம் வட மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒரு விடுதலையை பெறும் வரைக்கும் அவர்; தொடர்ந்து தனது வேலையை தக்க வைத்துக்கொண்டே வந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக